தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  குரு மறைந்து விட்டார்.. மாட்டிக்கொண்ட ராசிகள் நீங்கள் தான்.. தப்பிக்க முடியாத அடி உறுதி

குரு மறைந்து விட்டார்.. மாட்டிக்கொண்ட ராசிகள் நீங்கள் தான்.. தப்பிக்க முடியாத அடி உறுதி

Suriyakumar Jayabalan HT Tamil
May 18, 2024 04:29 PM IST

Guru Asthamanam: ராசி மாற்றம் செய்த அடுத்த இரண்டு நாட்களில் குருபகவான் ரிஷப ராசியில் அஸ்தமனமானார். கிரகங்களின் அஸ்தமனமானது அனைத்து ராசிகளுக்கும் அந்தமான சூழ்நிலைகளை உருவாக்கும். அந்த வகையில் குரு அஸ்தமனத்தால் சில ராசிகள் சிரமங்களை அனுபவிக்கப் போகின்றனர்.

குரு மறைந்து விட்டார்.. மாட்டிக்கொண்ட ராசிகள் நீங்கள் தான்.. தப்பிக்க முடியாத அடி உறுதி
குரு மறைந்து விட்டார்.. மாட்டிக்கொண்ட ராசிகள் நீங்கள் தான்.. தப்பிக்க முடியாத அடி உறுதி

குரு பகவான் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் அவருடைய இருக்கும். இடத்தை பொறுத்து சில ராசிகளுக்கு நன்மை மற்றும் தீமைகள் அமையும். அந்த வகையில் குரு பகவான் மே ஒன்றாம் தேதி அன்று மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு சென்றார்.

ராசி மாற்றம் செய்த அடுத்த இரண்டு நாட்களில் குருபகவான் ரிஷப ராசியில் அஸ்தமனமானார். கிரகங்களின் அஸ்தமனமானது அனைத்து ராசிகளுக்கும் அந்தமான சூழ்நிலைகளை உருவாக்கும். அந்த வகையில் குரு அஸ்தமனத்தால் சில ராசிகள் சிரமங்களை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

தனுசு ராசி

 

உங்கள் ராசிகள் ஆறாவது வீட்டில் குரு பகவான் அஸ்தமனம் ஆகியுள்ளார். இதனால் உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தை சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. வேலை செய்யும் இடத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எதிரிகளால் உங்களுக்கு சங்கடங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வாகனங்களில் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மற்றவர்களிடம் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். மன அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. புதிய முடிவுகள் எடுக்கும் போது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

துலாம் ராசி

 

உங்கள் ராசிகள் எட்டாவது வீட்டில் குருபகவான் அஸ்தமனம் ஆக்கியுள்ளார். இதனால் உங்களுக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. உடன் பிறந்தவர்களால் உங்களுக்கு சங்கடங்கள் ஏற்படக்கூடும். கணவன் மனைவிக்கு இடையே சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. கடின உழைப்பு கூட உங்களுக்கு முன்னேற்றத்தை கொடுப்பதற்கு சற்று தாமதமாகும். செலவுகள் அதிகரிக்க கூடும். கடன் வாங்கும்போது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். வேலை செய்யும் இடத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகமாக உள்ளது.

மீன ராசி

 

உங்கள் ராசியில் மூன்றாவது வீட்டில் குரு அஸ்தமனம் ஆகியுள்ளார் இதனால் உங்களுக்கு சோம்பேறித்தனம் அதிகரிக்கப்படும். இதனால் ஒவ்வொரு வேலையும் உங்களுக்கு முடிவதற்கு சற்று தாமதமாகும். வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். எதிரிகளால் உங்களுக்கு சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் கடுமையான மோதல்கள் உங்களுக்கு ஏற்படக்கூடும். எந்த ஒரு முடிவை எடுத்தாலும் ஒன்றுக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. தேவையில்லாத பயணங்களில் தவிர்த்துக் கொள்வது நல்லது. விபத்தில் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வாகனங்களில் செல்லும்போது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel