Guru Money Luck: குரு மே மாதம் இடம் மாறுகிறார்..3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Guru Money Luck: குரு மே மாதம் இடம் மாறுகிறார்..3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை

Guru Money Luck: குரு மே மாதம் இடம் மாறுகிறார்..3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை

Suriyakumar Jayabalan HT Tamil
Mar 07, 2024 02:02 PM IST

குருபகவானின் பயணத்தால் யோகத்தை பெற்ற ராசிகளை இங்கே காண்போம்.

குரு பெயர்ச்சி
குரு பெயர்ச்சி

குருபகவான் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். தற்போது குருபகவான் மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார். வருமே ஒன்றாம் தேதி அன்று ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார். குரு பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில் வரும் மே மாதம் ரிஷப ராசியில் குரு பகவான் இடமாறுகின்ற காரணத்தினால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் ஒரு சில ராசிகள் மிகப்பெரிய அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

 

குருபகவான் உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் செஞ்சாரம் செய்ய உள்ளார். உங்களுக்கு சாதகமான பலன்கள் அனைத்தும் கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். மற்றவர்களிடத்தில் நல்ல வரவேற்பு கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் உங்களுக்கு முன்னேற்றம் கிடைக்கும்.

ரிஷப ராசி

 

குருபகவான் உங்கள் ராசியில் முதல் வீட்டில் பயணம் செய்ய உள்ளார். இதனால் உங்களுக்கு சாதகமான சூழ்நிலை மே மாதத்தில் இருந்து உருவாகும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவு திருமணம் கைகூடும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும்.

கடக ராசி

 

உங்கள் ராசியில் 11-வது வீட்டில் குரு பகவான் சஞ்சாரம் செய்ய உள்ளார். இதனால் உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கப் போகின்றது. முன்னேற்றத்திற்கான நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் சிறப்பான திட்டங்கள் உருவாகும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வருமானத்தில் எந்த குறையும் இருக்காது. பணவரவு எக்கச்சக்கமாக இருக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

Whats_app_banner