தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here We Will See The Rasis Who Got Rajayoga By Guru Bhagavan

Guru Bhagavan: குரு நட்சத்திர இடமாற்றம்.. ஏப்ரல் மாதம் வரை 3 ராசிகளுக்கு பண மழை

Suriyakumar Jayabalan HT Tamil
Feb 24, 2024 05:58 PM IST

குரு பகவானால் ராஜயோகத்தை பெற்ற ராசிகள் இங்கே காண்போம்.

குரு பெயர்ச்சி
குரு பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

குரு பகவான் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். குருபகவான் நாட்டிற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். நவகிரகங்களின் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை குரு பகவான் தனது நட்சத்திரத்தை மாற்றக்கூடியவர். குருபகவான் தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வரும் குரு பகவான் தனது நட்சத்திரத்தை மாற்றி உள்ளார். கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி அன்று குரு பகவான் பரணி நட்சத்திரத்தில் மாறினார்.

அந்த நட்சத்திரம் சுக்கிர பகவானின் நட்சத்திரமாகும். சுக்கிரனின் நட்சத்திரமான பரணி நட்சத்திரத்தில் குருபகவான் நுழைந்துள்ளதால் அனைத்து விதமான ராசிகளுக்கும் தாக்கம் கட்டாயம் இருக்கும். இருப்பிடம் ஒரு சில ராசிகள் ஏப்ரல் வரை அதிர்ஷ்டத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

 

குருபகவானின் நட்சத்திர இடமாற்றமானது உங்களுக்கு நல்ல பலன்களை தரும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பணவரவில் எந்த குறையும் இருக்காது. நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

ரிஷப ராசி

 

குருபகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு நல்ல பலன்களை தரும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. வணிகத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நிதி நிலைமையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் சற்று கவனமாக இருப்பது நல்லது.

கன்னி ராசி

 

குருபகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு அற்புதமான பலன்களை பெற்றுத் தரும். பணம் மற்றும் நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். புதிய முதலீடுகள் உங்களுக்கு லாபத்தை பெற்று தரும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel