தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here We Will See The Rasis Who Get Royal Life From Lord Mercury

Mercury: புதனின் யோகத்தை பெறுகின்ற ராசிக்காரர்கள்

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 12, 2024 04:43 PM IST

புதன் பகவானால் ராஜ வாழ்க்கையை பெறுகின்ற ராசிகள் இங்கே காண்போம்.

புதன் பெயர்ச்சி
புதன் பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

நவகிரகங்கள் அவை பொது தங்களது இடத்தை மாற்றுவார்கள் அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள். அந்த வகையில் புதன் பகவானின் இடமாற்றம் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் பகவான் ஜனவரி 2ஆம் தேதி அன்று விருச்சிக ராசியிலிருந்து வக்ர நிவர்த்தி அடைந்தார்.

தற்போது நேர் பாதையில் பயணம் செய்யும் புதன் பகவானால் 12 ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்டத்தின் யோகத்தை பெற்றுள்ளனர். அது எந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

ரிஷப ராசி

 

புதன் பகவான் உங்கள் ராசியில் ஏதாவது வீட்டில் நேராக பயணம் செய்து வருகின்ற காரணத்தால் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் கூட்டு தொழில் வெற்றியடையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். எதிர்பாராத நேரத்தில் நிதி அதிர்ஷ்டம் கிடைக்கும்.

துலாம் ராசி

 

புதன் பகவான் உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் செஞ்சாரம் செய்து வருகின்றார். உங்களுக்கு நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். பல காரியங்கள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும்.

சிம்ம ராசி

 

புதன் பகவான் உங்கள் ராசிகள் நான்காவது வீட்டில் நேரான பயணத்தை தொடங்கி உள்ளார். உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கப் போகின்றது. சூரியனும் புதனும் உங்களுக்கு சாதகமான சூழ்நிலைகளை உருவாக்க போகின்றார்கள். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. நிறைய பணம் சம்பாதிப்பதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். வழக்கத்தை விட பணத்தை அதிகமாக சேமிப்பீர்கள்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.