தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here We Will See The Rasis Who Get Royal Life Due To Transit Of Rahu Ketu

ராகு கேது பரபரப்பாக வந்துவிட்டனர்.. அதிர்ஷ்டம் கொட்டப் போகுது.. ஜாக்பாட் பணமழை உங்களுக்குத்தான்

Suriyakumar Jayabalan HT Tamil
Mar 24, 2024 04:42 PM IST

Rahu Ketu: இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார்கள். வரும் 2025 ஆம் ஆண்டு ராகு கேது இருவரும் தங்களது இடத்தை மாற்றுகிறார்கள். ராகு கேதுவின் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

ராகு கேது
ராகு கேது

ட்ரெண்டிங் செய்திகள்

இவர்களுடைய இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ராகு கேது பதினெட்டு மாதங்கள் எடுத்துக் கொள்கின்றனர். கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் ராகு பகவான் மீன ராசியிலும் கேது பகவான் கன்னி ராசியிலும் இடம் மாறினார்கள்.

இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார்கள். வரும் 2025 ஆம் ஆண்டு ராகு கேது இருவரும் தங்களது இடத்தை மாற்றுகிறார்கள். ராகு கேதுவின் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில் தற்போது ராகு பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்திலும் கேது பகவான் அஸ்தம் நட்சத்திரத்திலும் பயணம் செய்கின்றனர். இவர்களுடைய நட்சத்திர இடமாற்றத்தால் அதிர்ஷ்டத்தை அனுபவிக்க போகும் ராசிகளை இங்கே காண்போம்.

துலாம் ராசி

 

ராகு மற்றும் கேது உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றனர். இதுவரை ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக குறையும். எதிரிகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். கடன் சிக்கல்கள் உங்களை விட்டு விலகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். திருமணத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். திருமண பாக்கியம் உண்டாகும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.

விருச்சிக ராசி

 

ராகு கேது பகவான் உங்களுக்கு நிம்மதியான வாழ்க்கையை கொடுக்கப் போகின்றனர். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொலைதூர பயணங்கள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும். தேவையில்லாத செலவுகள் அனைத்தும் குறையும். சொத்துக்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான அதிக வாய்ப்பு உள்ளது. முன்னோர்களின் தோஷம் நீங்கி உங்களுக்கு நல்ல வாழ்க்கை தொடங்க போகின்றது. வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

தனுசு ராசி

 

ராகு கேது இருவரும் உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றனர். இந்த ஆண்டு உங்களுக்கு சுப காரியங்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளது. எதிர்பாராத நேரத்தில் பணவரவு இருக்கும். உங்களுடைய சேமிப்பு அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். உயர் பதவியில் இருப்பவர்களால் உங்களுக்கு நல்ல யோகம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

 

WhatsApp channel