தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here We Will See The Rasis Who Get Royal Life Due To Transit Of Lord Venus

சுக்கிரன் உச்சத்தில்.. இந்த ராசிகளுக்கு ஜாக்பாட்.. பணமழை கொட்ட போகுது.. அதிர்ஷ்ட ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Apr 03, 2024 04:44 PM IST

Lord Venus: சுக்கிர பகவான் கடந்த மார்ச் 31ம் தேதி அன்று கும்ப ராசியில் இருந்து மீன ராசியில் நுழைந்தார். ஏற்கனவே மீன ராசியில் ராகுபகவான் பயணம் செய்து வருகின்றார். சுக்கிரன் மீன ராசியில் உச்சமடைந்துள்ளார். சுக்கிர பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

சுக்கிர பெயர்ச்சி
சுக்கிர பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

சுக்கிர பகவான் கடந்த மார்ச் 31ம் தேதி அன்று கும்ப ராசியில் இருந்து மீன ராசியில் நுழைந்தார். ஏற்கனவே மீன ராசியில் ராகுபகவான் பயணம் செய்து வருகின்றார். சுக்கிரன் மீன ராசியில் உச்சமடைந்துள்ளார். சுக்கிர பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிகளுக்கு அற்புதமான பலன்கள் கிடைக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

சுக்கிர பகவானால் உங்களுக்கு முன்னேற்றம் கிடைக்கும் ஆடம்பர செலவுகள் அதிகமாகும். குடும்பத்தில் பொறுப்புகள் அதிகமானாலும் சிறப்பாக முடிவடையும். குடும்பத்தை சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொலைதூர பயணங்கள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும் செலவுகள் அதிகரிக்கும். வாழ்க்கை துணையின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கொடுக்கும். நெருக்கமான நண்பர்களால் உங்களுக்கு முன்னேற்றம் கிடைக்கும். மன அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. 

ரிஷப ராசி

 

சுக்கிர பகவானின் உச்சம் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். வருமானத்தில் எந்த குறையும் இருக்காது. பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் இருக்கும். சுப நிகழ்வுகள் வீட்டில் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. மருத்துவ செலவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி ஏற்படும். காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

மிதுன ராசி

உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கப் போகின்றது. சுக்கிரன் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார். குழந்தைகளால் உங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி தேடி வரும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுக்கு சாதகமான பலன்கள் உண்டாகும். ஆடம்பர செலவுகள் அதிகரிக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

கடக ராசி

 

சுக்கிரன் உச்சம் பெற்று இருப்பதால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும். சாதகமான பலன்கள் உண்டாகும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பெற்றோரின் உடல் நிலத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். வருமானத்தில் எந்த குறையும் இருக்காது. திடீர் நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நிலம் சம்பந்தப்பட்ட தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். பண வரவில் எந்த குறையும் இருக்காது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel