தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Sani 2024 Game: சனி உக்கிரமாக வருகிறார்.. வக்ரத்தில் பணமழை.. அதிர்ஷ்டத்தில் நுழைய போகும் ராசிகள் நீங்களா?

Sani 2024 Game: சனி உக்கிரமாக வருகிறார்.. வக்ரத்தில் பணமழை.. அதிர்ஷ்டத்தில் நுழைய போகும் ராசிகள் நீங்களா?

Suriyakumar Jayabalan HT Tamil
Apr 12, 2024 04:51 PM IST

சனிபகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். வருகின்ற ஜூன் மாதம் 29ஆம் தேதி அன்று சனி பகவான் கும்ப ராசியில் வக்கிர பெயர்ச்சி அடைகிறார்.

சனி பெயர்ச்சி
சனி பெயர்ச்சி

இதன் காரணமாக சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். தற்போது சனி பகவான் 30 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். இந்த ஆண்டு சனி பகவானின் ஆண்டாக கருதப்படுகிறது.

சனிபகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். வருகின்ற ஜூன் மாதம் 29ஆம் தேதி அன்று சனி பகவான் கும்ப ராசியில் வக்கிர பெயர்ச்சி அடைகிறார். நவம்பர் 15 ஆம் தேதி வரை இதே நிலையில் சனி பகவான் பயணம் செய்ய உள்ளார். இதனால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் குறிப்பிட்ட சில ராசிகள் பண மழையில் நனைய போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

 

சனிபகவானின் பின்னோக்கிய பயணம் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. வருமானத்தின் வீட்டில் வக்கிர பெயர்ச்சி நடக்கின்ற காரணத்தினால் உங்களுக்கு நல்ல யோகம் கிடைக்கப் போகின்றது. புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் உங்களுக்கு அதிகரிக்கும் புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும் சுப பலன்கள் உங்களை தேடி வரும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும் வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.

மிதுன ராசி

 

சனிபகவானின் வக்கிர பயணம் ஆனது உங்களுக்கு நல்ல யோகத்தைப் பெற்றுத் தரப் போகின்றது. அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வீட்டில் சுப காரியங்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள், போட்டி தேர்வுகளில் வெற்றி பெறுவார்கள்.

மகர ராசி

 

சனிபகவானின் பின்னோக்கிய பயணம் உங்களுக்கு நன்மைகளை அள்ளிக் கொடுக்கும். உங்கள் ராசியில் பணம் ஸ்தானத்தில் சனி பகவான் பின்னோக்கிய பயணத்தை தொடர்கின்றார். இதனால் உங்களுக்கு எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டம் தேடி வரும். நிதி ஆதாயம் அதிகரிக்கும். செல்வத்தின் முன்னேற்றம் அதிகமாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். தொழிலில் பணவரவு அதிகரிக்கும். சிக்கிக் கடந்த பணங்கள் உங்களைத் தேடி வரும். அரசியல் வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு நல்ல வெற்றி கிடைக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel