குரு கஷ்டத்தை கொடுக்கப் போகிறார்.. சிக்கிக்கொண்ட ராசிகளில் உங்க ராசி இருக்கா.. மாட்டியாச்சு
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  குரு கஷ்டத்தை கொடுக்கப் போகிறார்.. சிக்கிக்கொண்ட ராசிகளில் உங்க ராசி இருக்கா.. மாட்டியாச்சு

குரு கஷ்டத்தை கொடுக்கப் போகிறார்.. சிக்கிக்கொண்ட ராசிகளில் உங்க ராசி இருக்கா.. மாட்டியாச்சு

Suriyakumar Jayabalan HT Tamil
Published May 17, 2024 03:15 PM IST

Here we will see the Rasis who are going to experience difficulty due to Lord Guru Asthamanam

குரு கஷ்டத்தை கொடுக்கப் போகிறார்.. சிக்கிக்கொண்ட ராசிகளில் உங்க ராசி இருக்கா.. மாட்டியாச்சு
குரு கஷ்டத்தை கொடுக்கப் போகிறார்.. சிக்கிக்கொண்ட ராசிகளில் உங்க ராசி இருக்கா.. மாட்டியாச்சு

இது போன்ற போட்டோக்கள்

தேவர்கள் குருவாக திகழ்ந்துவரும். குரு பகவான் மே ஒன்றாம் தேதியிலிருந்து ரிஷப ராசிக்கு சென்றார் இது சுக்கிர பகவானின் ராசியாக திகழ்ந்து வருகின்றது. சுக்கிரன் மற்றும் குரு இவர்கள் இருவரும் நட்பு கிரகமாக விளங்கி வருகின்றனர். குரு பகவானின் இடமாற்றம் இந்த ஆண்டு மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இது அனைத்து ராசிகளுக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

அதேசமயம் குருபகவான் ரிஷப ராசியில் அஸ்தமனமாக உள்ளார். இதனால் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கம் இருக்கும். குருபகவானின் அஸ்தமனத்தால் சில ராசிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

தனுசு ராசி

 

உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் குரு அஸ்தமனம் ஆகின்றார். இதனால் உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் சிக்கல்கள் ஏற்படா அதிக வாய்ப்பு உள்ளது. வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். எதிரிகளால் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. வெளியே செல்லும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பயணங்கள் செல்லும் போது கவனமாக இருக்க வேண்டும். வாகனம் ஓட்டும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் பல்வேறு விதமான தடைகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. மிகுந்த மன அழுத்தம் ஏற்படுவதற்கான சூழ்நிலைகள் அமையும். குடும்பத்தில் சிக்கல்கள் ஏற்படக்கூடும். கணவன் மனைவிக்கு இடையில் சண்டைகள் ஏற்படக்கூடும். திருமண வாழ்க்கையில் மந்தமான சூழ்நிலை உண்டாகும்.

துலாம் ராசி

 

உங்கள் ராசியில் எட்டாவது வீட்டில் குரு அஸ்தமனம் ஆகின்றார். தொழில் மற்றும் வியாபாரத்தில் பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. உடன் பிறந்தவர்களோடு பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உயர் அலுவலர்களோடு கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் உங்களுக்கு சிக்கல்கள் ஏற்படக்கூடும். நிதி நிலைமையில் மோசமான சூழ்நிலை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். உடன் பிறந்தவர்களிடையே சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

மீன ராசி

 

உங்கள் ராசியில் மூன்றாவது வீட்டில் குருபகவான் அஸ்தமனம் ஆகின்றார். இதனால் உங்களுக்கு சோம்பேறித்தனம் அதிகரிக்க கூடும். வேலைகள் செய்வதற்கு சற்று தாமதம் ஆகும். உயர் அலுவலர்களோடு கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. புதிய முடிவுகள் எடுக்கும் பொழுது பலமுறை சிந்திக்க வேண்டும். தேவையற்ற பயணங்களை குறைத்துக் கொள்ள வேண்டும். விபத்துக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வாகனம் ஓட்டும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சுற்றி இருப்பவர்களால் உங்களுக்கு சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. தொழிலில் முன்னேற்றம் இருக்காது. வியாபாரம் மந்தமான சூழ்நிலையில் இருக்கும். பணவரவில் எந்த சிக்கல்கள் இருந்தாலும் அது தொடர்ந்து கொண்டே இருக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

Whats_app_banner