தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here We Will See The Rasis Who Are Going To Enjoy Rajayoga Due To Transit Of Venus

விரட்டி விரட்டி பணம் கொட்ட போகுது.. சுக்கிரன் உச்சத்தில் இருக்கிறார்.. சனியும் சேர்ந்து விட்டார்.. ராஜராஜ ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Mar 28, 2024 04:05 PM IST

Transit of Venus: சனிபகவான் கும்ப ராசிகள் பயணம் செய்து வருகின்றார். தற்போது அவரோடு சுக்கிரன் இணைந்துள்ளார். சுக்கிர பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக பரப்புகின்றனர்.

சுக்கிர பெயர்ச்சி
சுக்கிர பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

சுக்கிரன் துலாம் மற்றும் ரிஷப ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றினாலும் இவருடைய இடமாற்றம் மிகப்பெரிய பாதிப்பை அனைத்து ராசிகளுக்கும் ஏற்படுத்தும். கடந்த மார்ச் 7ஆம் தேதி அன்று சுக்கிர பகவான் கும்ப ராசியில் நுழைந்தார் இது சனி பகவானின் சொந்த ராசியாகும்.

ஏற்கனவே சனிபகவான் கும்ப ராசிகள் பயணம் செய்து வருகின்றார். தற்போது அவரோடு சுக்கிரன் இணைந்துள்ளார். சுக்கிர பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக பரப்புகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

 

உங்கள் ராசியில் 11 வது வீட்டில் சுக்கிரன் நுழைந்துள்ளார். இதனால் உங்களுக்கு வருமானம் அதிகரிக்கும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வேலைகள் முடிவடையும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். புதிய திட்டங்கள் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். புதுமனை தம்பதிகளுக்கு நல்ல யோகம் கிடைக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும்.

ரிஷப ராசி

 

உங்கள் ராசியில் சுக்கிரன் பத்தாவது வீட்டில் நுழைந்துள்ளார். அரசு வேலையை எதிர்பார்த்து காத்து இருப்பவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். பரம்பரை சொத்துக்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாக்கும். புதிய வாய்ப்புகளால் உங்களுக்கு நல்ல யோகம் கிடைக்கும். எதிரிகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும்.

மிதுன ராசி

 

உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் சுக்கிரன் நுழைந்துள்ளார். இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டம் முழுமையாக கிடைக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். எடுக்கும் முடிவுகள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். மற்றவர்களுக்கு உதவி செய்வதில் நாட்டம் அதிகரிக்கும். குடும்பத்தில் மங்கள காரியங்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. வெளியூர் மற்றும் வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

சிம்ம ராசி

 

உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் சுக்கிரன் நுழைந்துள்ளார். இதனால் உங்களுக்கு அனைத்து வகையிலும் சிறப்பான பலன்கள் கிடைக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். காதல் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் ஈடுபட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். உறவினர்களின் வருகையால் உங்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும். நண்பர்களால் உதவி கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பளம் உயர்வு கிடைக்கக்கூடும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel