தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here We Will See The Rasis Where Saturn Is Going To Experience Rajayoga Due To Vakra Journey

சனி ஜூன் பணமழை.. வக்ரப் பெயர்ச்சி.. அதிர்ஷ்டம் கொட்ட போகுது.. யோக ராசிகள் இவங்கதான்..!

Suriyakumar Jayabalan HT Tamil
Apr 04, 2024 10:13 AM IST

Saturn: சனி பகவான் வருகின்ற ஜூன் மாதம் வக்ர பெயர்ச்சி அடைகிறார். நான்கு மாதங்களுக்கு மேலாக ஒரு ராசியில் வக்கிர பயணத்தை சனி பகவான் மேற்கொள்வார். அந்த வகையில் கும்ப ராசியில் வக்ர பயணம் மேற்கொள்கிறார்.

சனி பெயர்ச்சி
சனி பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

சனிபகவான் தற்போது தனது சொந்த ராசியான கும்பராசிகள் பயணம் செய்து வருகின்ற இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார்கள். இந்த 2024 சனிபகவானின் ஆண்டாக கருதப்படுகிறது வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார். சனி பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

சனி பகவான் வருகின்ற ஜூன் மாதம் வக்ர பெயர்ச்சி அடைகிறார். நான்கு மாதங்களுக்கு மேலாக ஒரு ராசியில் வக்கிர பயணத்தை சனி பகவான் மேற்கொள்வார். அந்த வகையில் கும்ப ராசியில் வக்ர பயணம் மேற்கொள்கிறார். இதனால் சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவித்த போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

 

உங்கள் ராசிகள் 11 வது வீட்டில் சனி பகவான் வக்கிரமாகின்றார். இதனால் உங்களுக்கு திடீர் பணவரவு உண்டாகும். பொதுமணத் தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கக்கூடிய சூழ்நிலை உண்டாகும். ஒவ்வொரு துறையிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். ஜூன் மாதத்தில் உங்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம் தேடி வரும்.

ரிஷப ராசி

 

உங்கள் ராசிகள் பத்தாவது வீட்டில் சனி பகவான் பின்னோக்கிய பயணத்தை மேற்கொள்ளப் போகின்றார். ஜூன் மாதம் முதல் உங்களுக்கு சுப பலன்கள் கிடைக்கப் போகின்றது. நல்ல பலன்கள் உங்களைத் தேடி வரும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தொழில் நல்ல முன்னேற்றம் இருக்கும் மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.

விருச்சிக ராசி

 

உங்கள் ராசிகள் நான்காவது வீட்டில் சனி பின்னோக்கிய பயணத்தை மேற்கொள்ள உள்ளார். இதனால் உங்களுக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சி மற்றும் அமைதி உண்டாகும். செல்வ செழிப்பிற்கு எந்த குறையும் இருக்காது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel

டாபிக்ஸ்