தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  குருவோடு சேர்ந்த புதன்.. 15 நாட்கள் விடமாட்டார்கள்.. 3 ராசிகளுக்கு கொட்டும் பணமழை

குருவோடு சேர்ந்த புதன்.. 15 நாட்கள் விடமாட்டார்கள்.. 3 ராசிகளுக்கு கொட்டும் பணமழை

Suriyakumar Jayabalan HT Tamil
Apr 12, 2024 12:59 PM IST

Mercury: மேஷ ராசியில் குரு பகவான் பயணம் செய்து வருகின்றார். கடந்த மார்ச் 26 ஆம் தேதி என்று புதன் பகவான் மேஷ ராசியில் நுழைந்தார். இந்த இரண்டு கிரகங்களும் சேர்ந்ததால் சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர்.

குரு
குரு

நவகிரகங்களின் இளவரசனாக திகழ்ந்து வருபவர் புதன் பகவான். இவர் காதல், திருமணம், அறிவு, கல்வி உள்ளிட்டவை களுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர். புதன் பகவான் இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

தற்போது மேஷ ராசியில் குரு பகவான் பயணம் செய்து வருகின்றார். கடந்த மார்ச் 26 ஆம் தேதி என்று புதன் பகவான் மேஷ ராசியில் நுழைந்தார். இந்த இரண்டு கிரகங்களும் சேர்ந்ததால் சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மகர ராசி

 

உங்கள் ராசியில் நான்காவது பெட்டில் குரு புதன் சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் வசதிகள் அதிகரிக்கப்படும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். சொத்துக்கள் அதிகம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். பரம்பரை சொத்துகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பணவரவில் ஏற்பட்டு வந்து சிக்கல்கள் அனைத்தும் குறையும்.

கடக ராசி

 

உங்கள் ராசிகள் பத்தாவது வீட்டில் குருபுதன் சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் உங்களுக்கு வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல வெற்றி கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். விரும்பிய இடமாற்றம் உங்களுக்கு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. தொழிலில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறைந்து லாபம் அதிகரிக்கும்.

சிம்ம ராசி

 

உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் குரு புதன் சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் அடுத்த 15 நாட்கள் உங்களுக்கு அதிர்ஷ்ட யோகம் கிடைக்கப் போகின்றது. நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். உங்களுடைய புத்திசாலித்தனத்தால் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நீங்கள் எடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றியடைய கூடும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel