தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  குரு பறந்து வருகிறார்.. பண யோகத்தை கொட்டுகிறார்.. ராஜயோகம் இந்த ராசிகளுக்கு தான்..!

குரு பறந்து வருகிறார்.. பண யோகத்தை கொட்டுகிறார்.. ராஜயோகம் இந்த ராசிகளுக்கு தான்..!

Suriyakumar Jayabalan HT Tamil
Apr 13, 2024 04:18 PM IST

குருபகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்டு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்க போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

குருபகவான்
குருபகவான்

குரு பகவான் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார். வரும் மே மாதம் மூன்றாம் தேதி அன்று ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார். இந்த ஆண்டு இடம்பெயர்ச்சி செய்யக்கூடிய குருபகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் மிகவும் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

குருபகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்டு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்க போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்

மேஷ ராசி

 

உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் குருபகவான் பயணம் இதனால் உங்களுக்கு நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். நீண்ட நாட்களாக சிக்கிக் கடந்த பணம் உங்களைத் தேடி வரும். நிதி நிலைமையில் எதிர்பாராத நேரத்தில் உங்களுக்கு முன்னேற்றம் இருக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வேலை செய்யும் இடத்தில் முக்கிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.

விருச்சிக ராசி

 

உங்கள் ராசியில் ஏழாவது பெட்டில் குருபகவான் பயணம் செய்யப் போகின்றார். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கூட்டுத்தொழில் முயற்சிகள் வெற்றி அடையும் நிதி ரீதியாக முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதிவு உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். புதிய மாற்றங்கள் உங்களைத் தேடி வரும். கூட்டு தொழில் முயற்சிகள் வெற்றியாக முடிவடையும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாக்கும். புதிய வாய்ப்புகள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வீட்டில் மங்கள காரியங்கள் நடக்கும்.

ரிஷப ராசி

 

உங்கள் ராசியில் முதல் வீட்டில் குருபகவான் பயணம் செய்யப் போகின்றார். நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். வேலை சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் இருக்கும். பயணங்கள் நல்ல பலன்களை பெற்று தரும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகள் அனைத்தும் நிறைவேறும். திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்து விலகும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். நவபஞ்ச யோகத்தால் உங்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். குழந்தைகளால் நல்ல செய்தி உங்களை தேடி வரும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel