தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here We Will See The Rasis Where Guru Bhagavan Is Going To Experience Raja Yoga

Guru Peyarchi 2024 Palangal: குரு செய்யாமல் விடமாட்டார்.. பணமழை உச்சத்தில் இருக்கும்.. அதிர்ஷ்டக்கார ராசிகள் இவர்கள்தான்

Suriyakumar Jayabalan HT Tamil
Mar 23, 2024 02:48 PM IST

Guru Peyarchi 2024 Palangal: குரு பகவானின் அனைத்து விதமான அசைவுகளும் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. குரு பகவானின் புதிய பயணத்தால் மே மாதத்தில் இருந்து அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிகளை இங்கே காண்போம்.

குரு பெயர்ச்சி
குரு பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

குரு பகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான செல்வங்களும் கிடைக்கும் என கூறப்படுகிறது. தற்போது குருபகவான் மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார். வருமே ஒன்றாம் தேதியன்று ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார்.

குரு பகவானின் அனைத்து விதமான அசைவுகளும் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. குரு பகவானின் புதிய பயணத்தால் மே மாதத்தில் இருந்து அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிகளை இங்கே காண்போம்.

மேஷ ராசி

 

குருபகவான் உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் பயணம் செய்யப் போகின்றார். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உங்களுடைய பேச்சு திறமையால் காரியங்கள் முடிவடையும். மற்றவர்களிடத்தில் மரியாதை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். புதிய வேலையை தொடங்கினால் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

விருச்சிக ராசி

 

உங்கள் ராசிகள் ஏழாவது வீட்டில் குருபகவான் பயணம் செய்ய உள்ளார். இதனால் உங்களுக்கு திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி ஏற்படும். கணவன் மனைவிக்கு அன்பு அதிகரிக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதை கிடைக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். கூட்டு தொழில் முயற்சிகள் சிறப்பாக இருக்கும். நிதி ரீதியாக ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

ரிஷப ராசி

 

உங்கள் ராசியில் முதல் வீட்டில் குரு பகவான் பயணம் செய்ய உள்ளார். இதனால் உங்களுடைய நீண்ட நாள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பயணங்கள் நல்ல பலன்களை பெற்று தரும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும். திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். நல்ல செய்திகள் உங்களைத் தேடி வரும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel