தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  குரு மேல் பாய்ந்த சுக்கிரன்.. திரிகோண ராஜயோகத்தால் பண மழை.. அதிர்ஷ்டத்தில் குளிக்க போகும் 3 ராசிகள்

குரு மேல் பாய்ந்த சுக்கிரன்.. திரிகோண ராஜயோகத்தால் பண மழை.. அதிர்ஷ்டத்தில் குளிக்க போகும் 3 ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
May 15, 2024 04:54 PM IST

Trikona Raja Yoga: சுக்கிரன் ரிஷப ராசியில் நுழைகின்ற காரணத்தினால் ஏற்கனவே ரிஷப ராசியில் பயணம் செய்து வரும் குரு பகவானோடு இணைகின்ற குரு மற்றும் சுக்கிரன் இவர்கள் இருவரும் நட்பு கிரகங்களாக விளங்கி வருகின்றனர். இவர்களின் செயற்கையால் திரிகோண ராஜ யோகம் உருவாக்கியுள்ளது.

குரு மேல் பாய்ந்த சுக்கிரன்.. திரிகோண ராஜயோகத்தால் பண மழை.. அதிர்ஷ்டத்தில் குளிக்க போகும் 3 ராசிகள்
குரு மேல் பாய்ந்த சுக்கிரன்.. திரிகோண ராஜயோகத்தால் பண மழை.. அதிர்ஷ்டத்தில் குளிக்க போகும் 3 ராசிகள்

நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்கக்கூடியவர் சுக்கிரன். இவர் செல்வம், செழிப்பு, ஆடம்பரம், சொகுசு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். இவர் மாதத்திற்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக் கூடியவர். வருகின்ற மே 19ஆம் தேதி அன்று சுக்கிரன் தனது சொந்த ராசியான ரிஷப ராசியில் நுழைகிறார்.

சுக்கிரன் ரிஷப ராசியில் நுழைகின்ற காரணத்தினால் ஏற்கனவே ரிஷப ராசியில் பயணம் செய்து வரும் குரு பகவானோடு இணைகின்ற குரு மற்றும் சுக்கிரன் இவர்கள் இருவரும் நட்பு கிரகங்களாக விளங்கி வருகின்றனர். இவர்களின் செயற்கையால் திரிகோண ராஜ யோகம் உருவாக்கியுள்ளது. இதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருந்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கொட்டப் போகுது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

விருச்சிக ராசி

 

திரிகோண ராஜயோகத்தால் உங்களுக்கு பல்வேறு விதமான பலன்கள் கிடைக்கப் போகின்றது. திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். திருமணம் ஆனவர்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும் பல துறைகளில் வெற்றி கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வீட்டில் மங்கள காரியங்கள் நடக்கும். குடும்பத்தினருடன் இனிமையான பொழுது உண்டாகும். நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டாகும்.

கடக ராசி

 

திரிகோண ராஜ யோகம் உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றது. கடன் சிக்கல்கள் விலகும். பண சிக்கல்கள் உங்களை விட்டுச் செல்லும். மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய தொழில் நல்ல லாபத்தை பெற்று தரும். புதிய முதலீடுகளால் நல்ல யோகம் கிடைக்கும். உடன்பிறந்தவர்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். பணவரவில் இருந்த குறையும் இருக்காது.

சிம்ம ராசி

 

திரிகோண ராஜ யோகம் உங்களுக்கு சுப பலன்களை கொடுக்கப் போகின்றது. எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். வேலை செய்யும் இடத்தில் கடின உழைப்புக்கான பலன்கள் கிடைக்கும். பாராட்டுகள் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்க கூடும். புதிய வாய்ப்புகள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்களிடம் மகிழ்ச்சியான சூழ்நிலையை உண்டாகும். நண்பர்களால் உதவி கிடைக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel