குரு கஷ்டத்தை தாறுமாறாக கொடுக்கப் போகிறார்.. புதன் வக்கிர நிலையில் கூட்டணி.. கவனமா இருக்க வேண்டும்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  குரு கஷ்டத்தை தாறுமாறாக கொடுக்கப் போகிறார்.. புதன் வக்கிர நிலையில் கூட்டணி.. கவனமா இருக்க வேண்டும்!

குரு கஷ்டத்தை தாறுமாறாக கொடுக்கப் போகிறார்.. புதன் வக்கிர நிலையில் கூட்டணி.. கவனமா இருக்க வேண்டும்!

Suriyakumar Jayabalan HT Tamil
Nov 07, 2024 12:20 PM IST

புதன் பகவான் மற்றும் குரு பகவான் இருவரும் வக்கிர நிலையில் ஒரே நேரத்தில் பயணம் செய்கின்ற காரணத்தினால் இதனுடைய தாக்கம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் மோசமான பலன்களை பெறப்போகின்றனர்.

குரு கஷ்டத்தை தாறுமாறாக கொடுக்கப் போகிறார்.. புதன் வக்கிர நிலையில் கூட்டணி.. கவனமா இருக்க வேண்டும்!
குரு கஷ்டத்தை தாறுமாறாக கொடுக்கப் போகிறார்.. புதன் வக்கிர நிலையில் கூட்டணி.. கவனமா இருக்க வேண்டும்!

நவகிரகங்களில் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். புதன் பகவான் நரம்பு, வியாபாரம், கல்வி, படிப்பு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார்.

இந்நிலையில் குரு பகவான் தற்போது ரிஷப ராசியில் வக்கிர நிலையில் பயணம் செய்து வருகின்றார். புதன் பகவான் வருகின்ற நவம்பர் 26ஆம் தேதி அன்று விருச்சிக ராசியில் வக்கிர நிலையில் பயணம் செய்ய உள்ளார்.

புதன் பகவான் மற்றும் குரு பகவான் இருவரும் வக்கிர நிலையில் ஒரே நேரத்தில் பயணம் செய்கின்ற காரணத்தினால் இதனுடைய தாக்கம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் மோசமான பலன்களை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

மேஷ ராசி

நவம்பர் மாத இறுதியில் குரு மற்றும் புதன் இருவரும் ஒரே நேரத்தில் வக்கிர நிலையில் பயணம் செய்வது உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும். வேலை செய்யும் இடத்தில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் பணிச்சுமை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மன அழுத்தம் ஏற்படுவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். வியாபாரத்தில் நீங்கள் பெரிய நஷ்டங்களை சந்திக்க நேரிடும். 

தொழிலில் நீங்கள் அவ்வப்போது சிரமங்களை சந்திப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. புதிய முதலீடுகள் செய்யும் பொழுது பலமுறை சிந்திப்பது நல்லது. புதிய முதலீடுகளை தற்போது தவிர்ப்பது நல்லது. நிதி ரீதியாக நீங்கள் மிகவும் பலவீனமான சூழ்நிலையை பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். உள்ளது செலவை கட்டுப்படுத்திக் கொண்டால் உங்களுக்கு நல்லாதாக இருக்கும். பணச் சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு அதிகம் உள்ளது.

கடக ராசி

புதன் மற்றும் குரு இவர்கள் இருவரும் நவம்பர் மாத இறுதியில் வக்கிர நிலையில் பயணம் செய்யப் போகின்றனர். இதனால் உங்களுக்கு கடன் சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எடுத்துக்கொண்ட காரியங்களில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கவனக்குறைவோடு செயல்பட்டால் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்படக்கூடும். பெரிய இழப்புகளை நீங்கள் சந்திப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. 

பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மற்றவர்களுக்கு கடன் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. உயர் அலுவலர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்படக்கூடும். உடல் ஆரோக்கியத்தில் நீங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். வியாபாரத்தில் அலைச்சல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. தொழிலில் நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டிய தருணமாக இது இருக்கும்.

துலாம் ராசி

நவம்பர் மாதம் இறுதியில் குரு பகவான் மற்றும் புதன் பகவான் வக்கிர நிலையில் பயணம் செய்யப்போகும். சென்டர் இதனால் உங்களுக்கு வாழ்க்கையில் பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்படக்கூடும். மிக நிலைமையில் மோசமாக சூழ்நிலை உங்களுக்கு உண்டாகும். யாரிடமும் நீங்கள் கடன் வாங்காமல் இருப்பது நல்லது. இல்லையென்றால் கடன் சிக்கல்கள் பெரிதாக மாறிவிடும். வியாபாரத்தில் அவ்வப்போது நஷ்டங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. 

தொழிலில் நீங்கள் மிகப்பெரிய சிக்கல்களை சந்திக்க நேரிடும். திருமண வாழ்க்கையில் அவ்வப்போது சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மன அழுத்தம் உங்களுக்கு அதிகமாக இருக்கக்கூடிய சூழ்நிலைகள் உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே அவ்வப்போது சண்டை மற்றும் சச்சரவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்படக்கூடும். எனவே நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner