தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Guru Peyarchi: குரு தாலி பாக்கியம் கொடுப்பார்.. பணம் கூரையை பிச்சிகிட்டு கொட்ட போகுது.. இன்று முதல் விளையாட்டு ஆரம்பம்..

Guru peyarchi: குரு தாலி பாக்கியம் கொடுப்பார்.. பணம் கூரையை பிச்சிகிட்டு கொட்ட போகுது.. இன்று முதல் விளையாட்டு ஆரம்பம்..

Suriyakumar Jayabalan HT Tamil
May 01, 2024 10:26 AM IST

Guru peyarchi palangal 2024: மேஷ ராசியில் பயணம் செய்து வந்த குருபகவான் இன்று மே ஒன்றாம் தேதி அன்று சுக்கிர பகவானால் ஆளப்படும் ரிஷப ராசியில் நுழைகிறார். அதற்குப் பிறகு அக்டோபர் மாதம் ஒன்பதாம் தேதி அன்று ரிஷப ராசியில் வக்ர நிலை அடைகிறார்.

குரு பெயர்ச்சி 2024
குரு பெயர்ச்சி 2024

நவகிரகங்களில் மங்கள கிரகமாக இருக்கக்கூடியவர் குருபகவான். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். குருபகவான் வருடத்திற்கு ஒருமுறை இடத்தை மாற்றக் கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

குரு பகவான் தேவர்களின் குருவாக திகழ்ந்து வருகின்றார். இவர் தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். ஆண்டிற்கு ஒரு முறை இடமாற்றுகின்ற சம்பவம் இப்போது நடந்துள்ளது. மேஷ ராசியில் பயணம் செய்து வந்த குருபகவான் இன்று மே ஒன்றாம் தேதி அன்று சுக்கிர பகவானால் ஆளப்படும் ரிஷப ராசியில் நுழைகிறார். அதற்குப் பிறகு அக்டோபர் மாதம் ஒன்பதாம் தேதி அன்று ரிஷப ராசியில் வக்ர நிலை அடைகிறார்.

குருபகவான் தனது நண்பனின் ராசியான ரிஷப ராசியில் நுழைகின்ற காரணத்தினால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் குறிப்பிட்ட முக்கிய பலன்களை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

 

குரு பகவான் உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் பயணம் செய்யப் போகின்றார். இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும். தொழில் ரீதியாக முன்னேற்றம் உண்டாகும். குரு பகவானின் அருளால் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும்.

ரிஷப ராசி

 

குருபகவான் உங்கள் ராசியில் முதல் வீட்டில் பயணம் செய்கின்றார். இதனால் உங்களுக்கு இந்த ஆண்டு முழுவதும் பயனுள்ள ஆண்டாக அமையும். வெளிநாட்டு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். கடன் சிக்கல்கள் குறையும். இதுவரை நிலுவையில் இருந்த பணம் உங்களை தேடி வரும். புதிய முதலீடுகளுக்கு இந்த காலம் உங்களுக்கு சிறந்த காலமாக அமையும்.

மிதுன ராசி

 

உங்கள் ராசியில் 12 வது வீட்டில் குருபகவான் பயணம் செய்கின்றார். இதனால் உங்களுக்கு நண்பர்களால் உதவி கிடைக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். புதிய தொழில் தொடங்கினால் அது நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். திருமணமான தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கக்கூடும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் உங்களைத் தேடி வரும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

சிம்ம ராசி

 

உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் குருபகவான் பயணம் செய்கின்ற காரணத்தினால் உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கப் போகின்றது. வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வெளிநாடு செல்வதற்கு வாய்ப்புகள் உண்டாக்கும். உங்கள் கனவுகள் அனைத்தும் நிறைவேறும். வருமானத்தில் நல்ல உயர்வு இருக்கும் மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel

டாபிக்ஸ்