Tamil News  /  Astrology  /  Here We Will See The Rasis That Will Get Rahu Ketu Yoga

Rahu Ketu: நட்சத்திர யோகத்தில் ராகு கேது.. இந்த ராசிகளுக்கு பணப்பெட்டி தயார்

Suriyakumar Jayabalan HT Tamil
Feb 03, 2024 04:58 PM IST

ராகு கேது கொட்டும் யோகத்தை பெறப்போகின்ற ராசிகளை இங்கே காண்போம்.

ராகு கேது பெயர்ச்சி
ராகு கேது பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் ராகு பகவான் மீன ராசியிலும், கேது பகவான் கன்னி ராசியிலும் இடம் மாறினார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார்கள். இவர்களுடைய இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறுவார்கள்.

ராசி மாற்றம் மட்டுமல்லாது இவர்களுடைய நட்சத்திரம் மாற்றமும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் ராகு பகவான் ரேவதி நட்சத்திரத்திலும், கேது பகவான் சித்திரை நட்சத்திரத்திலும் ஜனவரி 1ஆம் தேதி அன்று நுழைந்தனர். இதனால் அதிர்ஷ்டத்தை பெரும் ராசிகள் குறித்து இங்கு காண்போம்.

மேஷ ராசி

 

குடும்ப வாழ்க்கையில் இதுவரை இருந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும். கணவன் மனைவிக்கு இடையே அனுமதி இருக்கும். ராசி மாற்றத்தால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும். மனைவியால் உங்களுடைய வாழ்க்கை உயரும். திருமணத்தில் ஏற்பட்டு வந்த தடைகள் அனைத்தும் விலகும். கூட்டுத் தொழில் முயற்சிகள் சிறப்பாக முடிவடையும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரித்து முன்னேற்றம் உண்டாகும். பொருளாதாரத்தில் நல்ல வளர்ச்சி இருக்கும். எதிர்பாராத நேரத்தில் நிதி வரவு இருக்கும்.

ரிஷப ராசி

 

இந்த ஆண்டு முழுவதும் உங்களுக்கு சுகமான பலன்களை ராகு கிரகம் கொடுக்கப் போகிறார். வருமானத்தில் எந்த குறையும் இருக்காது. புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். பணவரவில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்காத வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் சற்று கவனமாக இருக்க வேண்டும்.

துலாம் ராசி

 

ராகு கேது உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றனர். பொருளாதாரத்தில் உங்களுடைய நிலைமையை வலுவாக மாறும். எதிரிகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். வீட்டில் மங்கள காரியங்கள் நடக்கும். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றி அடையும். உங்களுடைய விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். வேலை செய்யும் இடத்தில் சக ஊழியர்கள் உங்களுக்கு சாதகமாக இருப்பார்கள். உயர் அலுவலர்கள் உங்களுக்கு பாராட்டுகளை கொடுப்பார்கள்.

கும்ப ராசி

 

ராகு கேது உங்களுக்கு சிறப்பான வாழ்க்கையை கொடுக்கப் போகின்றனர். பண வரவில் எந்த குறையும் இருக்காது. வாழ்க்கையில் ஏற்பட்டிருந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறைந்து உறவு மேம்படும். காரியத்தடைகள் அனைத்தும் விலகும். கூட்டுத் தொழில் முயற்சிகள் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். பொருளாதாரத்தில் இருந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். போட்டி தேர்வுகளில் வெற்றி அடைவார்கள். நிதி நிலைமையில் மேம்பாடு இருக்கும். வருமானத்தில் எந்த குறையும் இருக்காது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.