தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Lord Mars: அதிர்ஷ்டத்தில் விளையாடும் ராசிகள்.. செவ்வாய் பணமழை ஆரம்பம்.. யோகம் தேடி வருகுது.. உங்க ராசி இருக்கா?

Lord Mars: அதிர்ஷ்டத்தில் விளையாடும் ராசிகள்.. செவ்வாய் பணமழை ஆரம்பம்.. யோகம் தேடி வருகுது.. உங்க ராசி இருக்கா?

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 01, 2024 02:00 PM IST

Lord Mars: மீன ராசியில் பயணம் செய்து வந்த செவ்வாய் பகவான் ஜூன் ஒன்றாம் தேதி அன்று தனது சொந்த ராசியான மேஷ ராசிக்குள் நுழைந்தார். ஒரு ஆண்டிற்கு பிறகு தனது சொந்தமான ராசியில் செவ்வாய் பகவான் புகுந்துள்ளார். இதன் தாக்கம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும்.

அதிர்ஷ்டத்தில் விளையாடும் ராசிகள்.. செவ்வாய் பணமழை ஆரம்பம்.. யோகம் தேடி வருகுது.. உங்க ராசி இருக்கா?
அதிர்ஷ்டத்தில் விளையாடும் ராசிகள்.. செவ்வாய் பணமழை ஆரம்பம்.. யோகம் தேடி வருகுது.. உங்க ராசி இருக்கா?

நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள் அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள். இந்த இடைப்பட்ட காலத்தில் பன்னிரண்டு ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். நவக்கிரகங்களின் அசைவுகளை பொறுத்து ஒருவரின் ஜாதகம் அமைவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

மீன ராசியில் பயணம் செய்து வந்த செவ்வாய் பகவான் ஜூன் ஒன்றாம் தேதி அன்று தனது சொந்த ராசியான மேஷ ராசிக்குள் நுழைந்தார். ஒரு ஆண்டிற்கு பிறகு தனது சொந்தமான ராசியில் செவ்வாய் பகவான் புகுந்துள்ளார். இதன் தாக்கம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

மேஷ ராசி

உங்கள் ராசியில் முதல் வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு நிதி நிலைமைகள் நல்ல முன்னேற்றம் இருக்கும். வருமானம் அதிகரிக்கக்கூடும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கைத் துணை என் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். தைரியம் மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்க கூடும். எடுத்துக் கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.

மகர ராசி

உங்கள் ராசியில் நான்காவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் ஜூன் மாதத்தில் இருந்து உங்களுக்கு வசதிகள் மற்றும் வாய்ப்புகள் அதிகரிக்க கூடும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும் மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். நிலம் சம்பந்தப்பட்ட தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பரம்பரை சொத்துக்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். பெற்றோரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க கூடும் கணவன் மனைவிக்குடைய அன்பு அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.

சிம்ம ராசி

உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு ஜூன் மாத தொடக்கத்தில் இருந்து அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கொடுக்கும். திட்டமிட்ட வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். வேலை தொடர்பான பயணங்கள் நல்ல பலன்களை பெற்றுத் தரும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். போட்டி தேர்வுகளில் மாணவர்கள் சிறந்து விளங்குவார்கள். மதிப்பெண்கள் அதிகம் பெற்று வெற்றி பெறுவார்கள். தன்னம்பிக்கை மற்றும் தைரியம் இந்த மாதத்தில் உங்களுக்கு அதிகரிக்கக்கூடும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel