தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here We Will See The Rasis That Will Be Experienced In The Royal Life Due To The Transit Of Saturn

சனி 400 நாட்கள் பயணம்.. பூரட்டாதி நுழைவு.. பணமழை கொட்டும்.. 3 ராசிகள் யோகம் வந்துவிட்டது..!

Suriyakumar Jayabalan HT Tamil
Apr 03, 2024 12:43 PM IST

Saturn Transit: சனிபகவான் இந்த ஏப்ரல் மாத தொடக்கத்தில் பூரட்டாதி நட்சத்திரத்திற்குள் நுழைகின்றார். ஒரு நட்சத்திரத்தில் இருந்து மற்றொரு நட்சத்திரத்திற்கு செல்ல சனிபகவான் 400 நாட்கள் எடுத்துக் கொள்கிறார்.

Saturn Transit
Saturn Transit

ட்ரெண்டிங் செய்திகள்

ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல சனி பகவான் 2 1/2 ஆண்டு காலம் எடுத்துக்கொள்கிறார். நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக இவர் விளங்கியவர்கள். சனி பகவான் கும்பம் மற்றும் மகர ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். 30 ஆண்டுகளுக்கு பிறகு சனி பகவான் தனது சொந்த ராசியான கும்பராசிகள் பயணம் செய்து வருகின்றார்.

இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார் வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார். சனி பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இவருடைய ராசி மாற்றம் மட்டுமல்லாது நட்சத்திர இடமாற்றமும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தில் ஏற்படுத்தும்.

அந்த வகையில் சனிபகவான் இந்த ஏப்ரல் மாத தொடக்கத்தில் பூரட்டாதி நட்சத்திரத்திற்குள் நுழைகின்றார். ஒரு நட்சத்திரத்தில் இருந்து மற்றொரு நட்சத்திரத்திற்கு செல்ல சனிபகவான் 400 நாட்கள் எடுத்துக் கொள்கிறார். இதனால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் குறிப்பிட்ட சில ராசிகள் ராஜயோகத்தை பெற்றுள்ளன. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

ரிஷப ராசி

 

சனிபகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றது. வியாபாரத்தில் நல்ல வெற்றி கிடைக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வணிகத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும் பெற்றோருடன் உறவு பலமாகும்.

மகர ராசி

 

சனி பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு பணவரவை சிறப்பாக கொடுக்கப் போகின்றது. நீண்ட நாட்களாக சிக்கிக் கிடந்த பணம் உங்களைத் தேடி வரும். மற்றவர்களிடத்தில் மரியாதை மற்றும் மதிப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். பேச்சு திறமையால் காரியங்கள் வெற்றி அடையும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். புதிதாக சொத்துக்கள் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

மேஷ ராசி

 

சனி பகவானின் நட்சத்திர இடம் மாற்றம் உங்களுக்கு பல நன்மைகளை கொடுக்கப் போகின்றது. வருமானத்தில் முன்னேற்றம் உண்டாகும். பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களால் உங்களுக்கு முன்னேற்றம் கிடைக்கும். பல வழிகளில் அதிக பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். புதிய முதலீடுகள் உங்களுக்கு நல்ல லாபத்தை பெற்று தரும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel