Saturn Transit: சனியின் உதயத்தால் யோகத்தை பெறும் ராசிக்காரர்கள்
Saturn Transit: சனிபகவானால் உச்சம் செல்ல போகும் ராசிகளை இங்கே காண்போம்.

நவகங்களில் சனிபகவான் நீதிமானாக விளங்கி வருகிறார். இவர் ஒரு ராசியில் சஞ்சாரம் செய்ய இரண்டரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக விளங்கி வருபவர் இவர். சனி பகவானின் பயணம் அனைவருக்கும் அச்சத்தை ஏற்படுத்தும்.
நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் கணக்கெடுத்து பாரபட்சமில்லாமல் இரட்டிப்பாக திருப்பிக் கொடுப்பார். சனி பகவான் 30 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்த ராசியான கும்ப ராசியில் தற்போது பயணம் செய்து வருகிறார். அவர் 2025 வரை இதே ராசியில் பயணம் செய்ய உள்ளார். இடமாற்றம் மட்டுமல்லாது கிரகங்களின் மற்ற செயல்களும் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்த வகையில் வரும் பிப்ரவரி 17ஆம் தேதி இன்று கும்ப ராசியில் அஸ்தமனம் ஆகிறார். ஒரு மார்ச் 25ஆம் தேதி வரை இதே நிலையில் சனி பகவான் பயணம் செய்ய உள்ளார். மார்ச் 25ஆம் தேதி உதயமாகும் சனி பகவானால் சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
ரிஷப ராசி
சனிபகவான் உதயத்தால் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கப் போகின்றது. பல ஆண்டுகளாக தடைப்பட்டு கிடந்த காரியங்கள் அனைத்தும் நடக்கும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் உண்டாகும். சனியின் சுப பலன்களால் உங்களுக்கு நல்ல யோகம் கிடைக்கப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது.
துலாம் ராசி
சனி பகவான் உதயம் உங்களுக்கு யோகத்தை கொடுக்க உள்ளது. வருமானத்திற்கு எந்த குறையும் இருக்காது. எதிர்பாராத நேரத்தில் நல்ல செய்தி உங்களை தேடி வரும். வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதி அதிகரிக்கும். நண்பர்களால் உங்களுக்கு உதவி கிடைக்கும். இதுவரை ஏற்பட்டு வந்த கஷ்டங்கள் அனைத்தும் விலகும்.
தனுசு ராசி
சனி பகவான் உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றார். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். இதுவரை வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். நிதி சம்பந்தப்பட்ட ஒரு விஷயங்களில் இருந்த சிக்கல்கள் குறையும். வருமானத்திற்கு எந்த குறையும் இருக்காது. உடல் ஆரோக்கியத்தை மட்டும் சற்று கவனித்துக் கொள்ள வேண்டும். பயணங்கள் செய்வதற்கான வாய்ப்புகள் அதிகமாகும்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9
