தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here We Will See The Rasis That Will Be Ascended By Saturn

Saturn: சனியின் அருளாசியை பெற்ற ராசிக்காரர்கள்

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 07, 2024 04:11 PM IST

Saturn Transit: சனிபகவானால் உச்சம் செல்ல போகும் ராசிகளை இங்கே காண்போம்.

சனிப்பெயர்ச்சி
சனிப்பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

சனிபகவான் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக விளங்கி வருகிறார் ஒவ்வொரு ராசியிலும் அதிக நாட்கள் பயணம் செய்யக் கூடியவர் இவருடைய தாக்கம் மிகவும் அதிகமாக இருக்கும்.

சனிபகவான் 2025 வரை கும்ப ராசியில் பயணம் செய்ய உள்ளார் இந்த புத்தாண்டான 2024 ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்ய உள்ளார். இதனால் 12 ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் குறிப்பிட்ட சில ராசிகள் அருள் ஆசியை பெறப்போகின்றனர் அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

 

சனி பகவானின் பயணம் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றது. வருமானம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. பல்வேறு விதமான வழிகளில் பண வரவு இருக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும்.புதிய ஒப்பந்தங்கள் முடிக்கப்படும். நல்ல பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் இருக்கும்.

ரிஷப ராசி

 

சனிபகவான் உங்களுக்கு பல்வேறு விதமான சுப பலன்களை கொடுக்கப் போகின்றார். சுக்கிரன் பகவானின் ஆட்சியில் ரிஷப ராசிக்காரர்கள் இருந்து வருகின்றனர். சனி பகவான் சுக்கிரனின் நட்பு கிரகம் என்பதால் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். அவருடைய கருணை உங்களுக்கு கிடைக்கும். புதிதாக வேலை வாய்ப்புகள் உங்களுக்கு உண்டாகும். பணவரவில் எந்த குறையும் இருக்காது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது.

மகர ராசி

 

சனிபகவான் உங்களுக்கு அதீத பலன்களை கொடுக்க போகின்றார். பேச்சின் செல்வாக்கு அதிகரிக்கும். மற்றவர்களிடத்தில் உங்களுடைய மரியாதை அதிகரிக்கும். பண வரவில் எந்த குறையும் இருக்காது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பளம் உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். சிக்கிக் கிடந்த பணம் மீட்டெடுக்கப்படும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.