குரு கோடு போட்டு தூக்குகிறார்.. சிக்கி சிதையும் ராசிகள்.. கஷ்டப்படுவது உறுதி.. நீங்க என்ன ராசி?
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  குரு கோடு போட்டு தூக்குகிறார்.. சிக்கி சிதையும் ராசிகள்.. கஷ்டப்படுவது உறுதி.. நீங்க என்ன ராசி?

குரு கோடு போட்டு தூக்குகிறார்.. சிக்கி சிதையும் ராசிகள்.. கஷ்டப்படுவது உறுதி.. நீங்க என்ன ராசி?

Suriyakumar Jayabalan HT Tamil
May 22, 2024 05:26 PM IST

Lord Guru Bhagavan: ரிஷப ராசிக்கு நுழைந்த இரண்டு நாட்களிலேயே ரிஷப ராசியில் குரு பகவான் அஸ்தமனமானார். இவருடைய அஸ்தமன பயணம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் ஒரு சில ராசிகளுக்கு சிக்கலை கொடுக்கப் போகின்றது.

குரு கோடு போட்டு தூக்குகிறார்.. சிக்கி சிதையும் ராசிகள்.. கஷ்டப்படுவது உறுதி.. நீங்க என்ன ராசி?
குரு கோடு போட்டு தூக்குகிறார்.. சிக்கி சிதையும் ராசிகள்.. கஷ்டப்படுவது உறுதி.. நீங்க என்ன ராசி?

இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். தேவர்களின் குருவாக திகழ்ந்துவரும். குரு பகவான் மே ஒன்றாம் தேதி அன்று மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு சென்றார் அது சுக்கிர பகவானின் சொந்தமான ராசியாகும். குரு பகவானின் ராசி மாற்றம் மட்டுமல்லாத அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில் ரிஷப ராசிக்கு நுழைந்த இரண்டு நாட்களிலேயே ரிஷப ராசியில் குரு பகவான் அஸ்தமனமானார். இவருடைய அஸ்தமன பயணம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் ஒரு சில ராசிகளுக்கு சிக்கலை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

தனுசு ராசி

 

உங்கள் ராசியில் ஆறாவது பெட்டில் குரு பகவான் அஸ்தமனம் ஆக்கியுள்ளார். இதனால் உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் சிக்கல்கள் ஏற்படாது வாய்ப்பு உள்ளது. வேலை செய்யும் இடத்தில் சக ஊழியர்களோடு மிகவும் கவனமாக இருக்க வேண்டும். எதிரிகளால் உங்களுக்கு சிக்கல்கள் ஏற்படக்கூடும். பயணத்தின் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வாகனங்களில் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் பல்வேறு விதமான தடைகளில் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. மிகுந்த மன அழுத்தம் உங்களுக்கு ஏற்படக்கூடும். புதிய முடிவுகள் எடுக்கும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

துலாம் ராசி

 

உங்கள் ராசிகள் எட்டாவது வீட்டில் குரு பகவான் அஸ்தமனமாக உள்ளார். இதனால் நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் பல சிக்கல்கள் ஏற்படாதீங்க வாய்ப்பு உள்ளது. கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தர சற்று தாமதமாகும். நிதி நிலைமையில் மோசமான சூழ்நிலை உண்டாகும். செலவுகள் அதிகரிக்க கூடிய சூழ்நிலை உண்டாகும். கடன் வாங்கும் சூழ்நிலைகள் அமையும். உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உடன் பிறந்தவர்களால் உங்களுக்கு கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

மீன ராசி

 

உங்கள் ராசியில் மூன்றாம் பக்கத்து வீட்டில் குருபகவான் அஸ்தமனம் ஆகி உள்ளார். இதனால் உங்களுக்கு சோம்பேறித்தனம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஒவ்வொரு வேலையும் முடிவடைவதற்கு சற்று தாமதமாகும். தேவையற்ற பயணங்களை குறித்துக் கொள்வது நல்லது. வாகனங்களில் செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும். பயணங்களால் உங்களுக்கு சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. வாகனங்கள் ஓட்டும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தை எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

 

Whats_app_banner