தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  ஆபத்து தரும் ராகுவோடு சேர்ந்த செவ்வாய்.. முரட்டு அடி உறுதியான ராசிகள் இவர்கள் தான்..!

ஆபத்து தரும் ராகுவோடு சேர்ந்த செவ்வாய்.. முரட்டு அடி உறுதியான ராசிகள் இவர்கள் தான்..!

Suriyakumar Jayabalan HT Tamil
Apr 11, 2024 01:09 PM IST

ராகு செவ்வாய் சேர்ந்து சிரமப்படுத்தப் போகும் ராசிகளை இங்கே காண்போம்.

ராகு செவ்வாய்
ராகு செவ்வாய்

நவக்கிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். இவர் தன்னம்பிக்கை, தைரியம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்த வருகின்றார். 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர்.

அந்த வகையில் தற்போது செவ்வாய் பகவான் வரும் ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி அன்று மீன ராசியில் உள்ளார். இதன் காரணமாக தற்போது மீன ராசியில் பயணம் செய்யும் ராகு பகவானுடைய செவ்வாய் பகவான் இணைகின்றார். இவர்களுடைய சேர்க்கை அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இவர்களின் சேர்க்கையால் அங்காரக யோகம் உருவாக்கியுள்ளது. இதனால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் குறிப்பிட்ட சில ராசிகள் சிக்கல் சந்திக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கே காணலாம்.

மேஷ ராசி

 

உங்கள் ராசியில் பன்னிரண்டாவது வீட்டில் அங்காரக யோகம் உருவாக்கியுள்ளது. இதனால் உங்களுக்கு பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் சிக்கல்கள் ஏற்படும். மன அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது உங்கள் பேச்சை கட்டுப்படுத்துவது நல்லது. மற்றவர்களிடம் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். உறவினர்களால் சிக்கல்கள் ஏற்படக்கூடும். நல்ல செய்தி உங்களை தேடி வருவதற்கு தாமதமாகும் அவ்வப்போது மகிழ்ச்சி கிடைக்கும். கணவன் மனைவிக்கிடையே சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.

கன்னி ராசி

 

அங்கார யோகம் உங்கள் ராசியில் ஐந்தாவது பெட்டில் உருவாக்கி உள்ளது இதனால் திருமண வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது மற்றவர்களிடம் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். உயர் அலுவலர்களுடன் பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் கவனமாக இருக்க வேண்டும். பல்வேறு விதமான சிக்கல்கள் உங்களுக்கு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. கூட்டுத்தொழில் முயற்சிகள் தற்போது நல்லது கிடையாது. தொழிலில் மந்தமான சூழ்நிலை இருக்கும். வியாபாரத்தில் பெரிய அளவு லாபம் இருக்காது எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

கும்ப ராசி

 

உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் அங்காரக யோகம் உருவாகி உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நிதி இழப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வெளியே பயணம் செல்லும் போது கவனமாக இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்தி காப்பாற்றிக் கொள்வது நல்லது. புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. பண இழப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. வேலை தொடங்குவதற்கான காலம் இதுவாக இருக்காது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

 

WhatsApp channel