தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  3 யோகங்களின் சேர்க்கை.. ராகுவிடம் புகுந்த சுக்கிரன்.. பண மழையில் நனையும் ராசிகள்.. அதிர்ஷ்டம் வருகிறது

3 யோகங்களின் சேர்க்கை.. ராகுவிடம் புகுந்த சுக்கிரன்.. பண மழையில் நனையும் ராசிகள்.. அதிர்ஷ்டம் வருகிறது

Suriyakumar Jayabalan HT Tamil
Apr 15, 2024 09:59 AM IST

கடந்த மார்ச் 31ஆம் தேதி அன்று சுக்கிர பகவான் மீன ராசியில் நுழைந்தார் வரும் ஏப்ரல் 24ஆம் தேதி வரை இதே ராசியில் பயணம் செய்வார். அதற்குப் பிறகு மேஷ ராசிக்கு இந்த மாறுகிறார் தற்போது மீன ராசியில் இருக்கும் ராகு பகவானோடு ஒன்று சேர்ந்து சுக்கிரன் பயணம் செய்து வருகிறார்

ராகு, சுக்கிரன்
ராகு, சுக்கிரன்

நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள் அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள் அவர்களுடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவும் அந்த வகையில் சுக்கிர பகவான் ஒரு அரசியல் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

கடந்த மார்ச் 31ஆம் தேதி அன்று சுக்கிர பகவான் மீன ராசியில் நுழைந்தார் வரும் ஏப்ரல் 24ஆம் தேதி வரை இதே ராசியில் பயணம் செய்வார். அதற்குப் பிறகு மேஷ ராசிக்கு இந்த மாறுகிறார் தற்போது மீன ராசியில் இருக்கும் ராகு பகவானோடு ஒன்று சேர்ந்து சுக்கிரன் பயணம் செய்து வருகிறார்.  இவர்களின் சேர்க்கை லட்சுமி நாராயண யோகம், மாளவ்யா யோகம், விபரீத ராஜயோகம் ஆகிய யோகங்களை உருவாக்கி உள்ளது. இந்த யோகத்தால் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்க போகின்றனர் அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

மிதுன ராசி சுக்கிரனின் அருளால் உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கப் போகின்றது ராஜ யோகங்களால் நீங்கள் மகிழ்ச்சியை அனுபவிக்க போகின்றீர்கள் வேலை செய்யும் இடத்தில் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும் வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும் திடீர் நிதி ஆதாயம் உங்களுக்கு கிடைக்கும் வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். ஆடம்பர வசதிகள் உங்களுக்கு அதிகமாக கிடைக்கும். செல்வத்திற்கு எந்த குறையும் இருக்காது.

கடக ராசி

 

சுக்கிரன் மற்றும் ராகு உங்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்க போகின்றனர். வேலை செய்யும் இடத்தில் புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். மேலும் வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பளம் உயர்வு கிடைக்கக்கூடும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். நிதி ஆதாயத்திற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். நிலுவையில் உள்ள வேலைகள் முடிவடையும். வாழ்க்கையில் எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றியடையும். குடும்பத்தில் மகிழ்ச்சியாக இருக்கும். பெரிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.

சிம்ம ராசி

 

உங்களுடைய ராசியில் பத்தாவது வீட்டில் குரு சுக்கிரன் சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் உங்களுக்கு நிதி ஆதாயம் அதிகரிக்கும் அதிர்ஷ்டம் பெருகும். பணவரவு எந்த குறையும் இருக்காது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். நல்ல செய்தி உங்களைத் தேடி வரும். மனமகிழ்ச்சி அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் முன்னேற்றம் உண்டாகும். பொறுப்புகள் அதிகரிக்கும். கடின உழைப்புகள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.

கன்னி ராசி

 

ராஜ யோகங்களால் உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கப் போகின்றது. உங்களுடைய ராசியில் ஏழாவது வீட்டில் ராகு சுக்கிரன் சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கும். முன்னோர்களின் சொத்துக்களால் பொருளாதார நிலை முன்னேற்றம் அடையும். கூடுதலாகாரங்கள் உங்களுக்கு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் புதிய வாய்ப்புகள் உண்டாகும். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். வேலை செய்யும் இடத்தில் பாராட்டுகள் கிடைக்கும். உங்களுடைய முன்னேற்றத்திற்கு அங்கீகாரம் கிடைக்கும். பண வரவில் இந்த குறையும் இருக்காது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel