தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here We Will See The Rasis That Mars And Rahu Are Going To Trouble Together

செவ்வாய் ராகு முரட்டு அடி.. அங்காரக யோகத்தால் சிக்கல்.. சிக்கி சிதைய போகும் ராசிக்காரர்கள்

Suriyakumar Jayabalan HT Tamil
Mar 27, 2024 05:58 PM IST

Mars and Rahu: செவ்வாயும் ராகுவும் சேர்ந்து கஷ்டப்படுத்தப் போகும் ராசிகளை இங்கே காண்போம்.

செவ்வாய், ராகு
செவ்வாய், ராகு

ட்ரெண்டிங் செய்திகள்

நவகிரகங்களில் தளபதியாக விளங்க கூடியவர் செவ்வாய் பகவான். இவர் தன்னம்பிக்கை, துணிவு, விடாமுயற்சி, வீரம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக விளங்கி வருகின்றார். 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் செவ்வாய் பகவான். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

ராகு பகவான் மீனம் ராசியில் பயணம் செய்து வரும் அதே சமயத்தில் வரும் ஏப்ரல் 22 ஆம் தேதி அன்று செவ்வாய் பகவான் மீன ராசியில் நுழைகின்றார். இந்நிலையில் ராகு மற்றும் செவ்வாய் இருவரும் இணைகின்றனர். இவர்களுடைய சேர்க்கையால் அங்காரக யோகம் உருவாகியுள்ளது. இந்த யோகம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் ஒரு சில மிகவும் கஷ்டப்படப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

 

உங்கள் ராசியில் பன்னிரண்டாவது வீட்டில் அங்காராக யோகம் உருவாக்கியுள்ளது. இதனால் பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தை எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உறவினர்களால் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. நிதி இழப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. அதிக கோபத்தை தவிர்ப்பது நல்லது.

கன்னி ராசி

 

உங்கள் ராசிகள் ஐந்தாவது வீட்டில் அங்காரக யோகம் உருவாக்கியுள்ளது. இதனால் திருமண வாழ்க்கையில் அவ்வப்போது சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வாழ்க்கை துணையுடன் வாக்குவாதம் ஏற்படுவதற்கான சூழ்நிலை உண்டாகும். குடும்பத்தில் மற்றவர்களிடம் பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வெளியே செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும். கூட்டு தொழில் முயற்சிகளை சற்று தள்ளி வைப்பது நல்லது. வணிகர்கள் அதிக சிக்கல்களை சந்திக்க கூடிய சூழ்நிலை உண்டாகும். வியாபாரம் மற்றும் தொழிலில் இக்கட்டான சூழ்நிலை உண்டாகும்.

கும்ப ராசி

 

உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் அங்காரக யோகம் உருவாக்கியுள்ளது. இதனால் உடல் ஆரோக்கியத்தின் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நிதி நிலைமையில் இழப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. குடும்ப உறுப்பினர்களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். தேவையில்லாத குற்றச்சாட்டுகள் உங்கள் மீது வரும். புதிய முதலீடுகள் செய்வதை தற்போது தவிர்ப்பது நல்லது. பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குடும்பத்தில் மற்றவர்களிடம் பேசும்போது எச்சரிக்கையாக இருப்பது நல்லது. தேவையில்லாத வார்த்தைகளை தவிர்ப்பது நல்லது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

 

WhatsApp channel