தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Guru Palan: குரு சொல்வதை செய்வார்.. இந்த ராசிகளை கையில் பிடிக்க முடியாது

Guru Palan: குரு சொல்வதை செய்வார்.. இந்த ராசிகளை கையில் பிடிக்க முடியாது

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 31, 2024 10:56 AM IST

Guru Peyarchi: குரு பகவானால் இந்த ஆண்டு சொர்க்க யோகத்தை பெறுகின்ற ராசிகளை இங்கு காண்போம்.

குரு பெயர்ச்சி
குரு பெயர்ச்சி

நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள். அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள். அந்த வகையில் 12 மாதங்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் குருபகவான். தற்போது குருபகவான் மேஷ ராசியில் பயணம் செய்து வருகிறார்.

வறுமை ஒன்றாம் தேதி அன்று ரிஷப ராசிக்கு இடம் வருகிறார். அந்த மாதத்திலேயே ஆறாம் தேதி என்று அஸ்தமனம் ஆகிறார். குரு பகவானின் இடமாற்றம் 12 ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

கடக ராசி

குருபகவான் உங்களுக்காக அதிர்ஷ்டத்தை அதிகரிக்க போகின்றார். இந்த ஆண்டு முழுவதும். உங்களுக்கு வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.

மேஷ ராசி

 

குரு பகவான் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளார். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். நிதி நிலைமைகள் நல்ல முன்னேற்றம் உண்டாகும். எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும் வசதிகள் அதிகரிக்கும். பணத்தின் சேமிப்பு உங்களுக்கு தற்போது உதவியாக இருக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது.

சிம்ம ராசி

 

குரு பகவான் இந்த ஆண்டு உங்களுக்கு முன்னேற்றம் கிடைக்கப் போகின்றது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுக்கு சாதகமான சூழ்நிலை உண்டாகும். வாய்ப்புகள் அதிகமாகும். நிதி ஆதாயத்திற்கான வலுவான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். எதிர்காலம் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். ஆராய்ச்சி துறையில் முன்னேற்றம் உண்டாகும். இந்த ஆண்டு சிறப்பான காலமாக அமையும்.

கன்னி ராசி

 

குருபகவானின் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கப் போகின்றது. இந்த ஆண்டு உங்களுக்கு நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. புதிய திட்டங்கள் வெற்றியடையும். அனைத்து விதமான சூழ்நிலைகளும் உங்களுக்கு சாதகமாக அமைய வாய்ப்பு உள்ளது. வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9