தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Sani Luck: சனி சொர்க்க வாழ்க்கையை பெறுகின்ற ராசிக்காரர்கள்

Sani Luck: சனி சொர்க்க வாழ்க்கையை பெறுகின்ற ராசிக்காரர்கள்

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 25, 2024 09:36 AM IST

சனி பகவானால் யோகத்தை பெறுகின்ற ராசிகளை இங்கே காண்போம்.

சனிபகவான்
சனிபகவான்

நீதிமானாக விளங்கக்கூடிய ஒரு சனி பகவான். சனி செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக் கூடியவர். பாரபட்சம் இல்லாமல் அனைத்தையும் இரட்டிப்பாக திருப்பிக் கொடுப்பார். நவகிரகங்களில் சனி பகவான் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக விளங்கி வருகிறார்.

நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள். அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள். அந்த வகையில் சனி பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார்.

சனிபகவான் தற்போது தனது சொந்த ராசிக்கான கும்ப ராசியில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு பயணம் செய்து வருகிறார். வரும் 2025 ஆம் ஆண்டு வரை இதே ராசியில் பயணம் செய்ய உள்ளார். சூரிய பகவான் கடந்த ஜனவரி 15ஆம் தேதியன்று மகர ராசிக்குள் நுழைந்தார். இதனால் சூரியன் சனி சேர்க்கை நிகழ்ந்துள்ளது.

இந்நிலையில் சனிபகவான் கும்ப ராசியில் உதயமாக உள்ளார். இதன் தாக்கம் 12 ராசிகளுக்கும் இருக்கும் இருப்பினும் குறிப்பிட்ட சில ராசிகள் யோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

 

சனிபகவான் அருளால் உங்களுக்கு வருமானம் அதிகரிக்க போகின்றது. பணவரவில் எந்த குறையும் இருக்காது வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. வருமானம் இரட்டிப்பாகும். சுப பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

ரிஷப ராசி

 

சனிபகவான் உங்களுக்கு பல்வேறு விதமான வாய்ப்புகளை கொடுக்க போகின்றார். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பணம் சேமிப்பதில் உங்களுடைய நாட்டம் அதிகரிக்கும். செலவுகள் குறையும். பண வரவில் இருந்த குறையும் இருக்காது. நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

மிதுன ராசி

 

சனி பகவான் உங்கள் நீண்ட பயணத்திற்கு நல்ல பலன்களை கொடுப்பார். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். செலவுகள் அதிகரித்தாலும் சுப செலவுகளாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் புதிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும் .மேலும் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். நீதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். பணவரவில் இருந்த குறையும் இருக்காது. பொருளாதாரத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9