தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here We Will See The Rasis That Get Yoga By Lord Mercury

பறந்து வரும் புதன்.. பணமழை வருகிறது.. யோகம் கொட்ட போகுது.. அதிர்ஷ்டம் வந்துவிட்டது

Suriyakumar Jayabalan HT Tamil
Mar 24, 2024 01:31 PM IST

Lord Mercury: இளவரசனாக விளங்க கூடிய புதன் பகவான் அஸ்தமன நிலையில் இருந்து கடந்த மார்ச் 15ஆம் தேதியன்று மீன ராசியில் உதயமானார். புதன் பகவானின் உதயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சிலர் ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர்.

புதன் பெயர்ச்சி
புதன் பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

புதன் பகவான் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாகத் திகழ்ந்து வருகின்றார். நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள். அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள். புதன் பகவானின் ஒவ்வொரு அசைவும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

அந்த வகையில் இளவரசனாக விளங்க கூடிய புதன் பகவான் அஸ்தமன நிலையில் இருந்து கடந்த மார்ச் 15ஆம் தேதியன்று மீன ராசியில் உதயமானார். புதன் பகவானின் உதயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சிலர் ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

 

புதன் பகவானின் உதயம் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கும். மன அழுத்தத்திலிருந்து விடுதலை கிடைக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். வியாபாரம் மற்றும் தொழில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

ரிஷப ராசி

 

புதன் பகவானின் உதயம் உங்களுக்கு பண வரவு அதிகரிக்கப் போகின்றது .புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும். நண்பர்களால் உதவி கிடைக்கும். உங்களை சுற்றி உள்ளவர்களால் மரியாதை அதிகரிக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். நோய் சிக்கல்கள் அனைத்தும் உங்களை விட்டு விலகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.

கன்னி ராசி

 

புதன் பகவானின் உதயம் உங்களுக்கு உயர்வை தர போகின்றது. மேல் படிப்பிற்காக வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் இதுவரை ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு சாதகமாக நடந்து கொள்வார்கள். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். வியாபாரம் மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வணிகத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.

துலாம் ராசி

 

புதனின் உதயம் காலம் உங்களுக்கு மகிழ்ச்சியை அதிகரிக்க போகின்றது. பணவரவில் எந்த குறையும் இருக்காது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக நடந்து கொள்வார்கள். சக ஊழியர்களால் உங்களுக்கு முன்னேற்றம் கிடைக்கும். தடைபட்டு கிடந்த காரியங்கள் அனைத்தும் நடக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel