தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here We Will See The Rasis That Get The Yoga Due To The Transit Of Venus

Sukra Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி யோகம்.. யோகக்கார ராசிகள் இவர்கள்தான்

Suriyakumar Jayabalan HT Tamil
Feb 25, 2024 10:55 AM IST

சுக்கிரப் பெயர்ச்சியால் யோகத்தை பெறுகின்ற ராசிகளை இங்கே காண்போம்.

சுக்கிர பெயர்ச்சி
சுக்கிர பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

அனைத்து கிரகங்களின் மாற்றமும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். அதே போல நவகிரகங்களில் சுக்கிர பகவானின் இடமாற்றமும் 12 ராசிகளுக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சனி பகவான் கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார் இது அவருடைய சொந்தமான ராசியாகும்.

சுக்கிரன் வரும் மார்ச் 7ஆம் தேதி அன்று சனி பகவான் ராசியான கும்ப ராசியில் நுழைகின்றார். வரும் மார்ச் 30 வரை இதே ராசியில் பயணம் செய்வார் சனி மற்றும் சுக்கிரன் இதனால் ஒன்று சேர்கின்றனர். இது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

ரிஷப ராசி

 

நீங்கள் சுக்கிர பகவானின் சொந்தமான ராசியாகும். நல்ல பலன்கள் உங்களுக்கு கிடைக்கப் போகின்றது. இந்த இடப்பெயர்ச்சி உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்றுத் தரும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வருமானத்தில் எந்த குறையும் இருக்காது. மிக நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும் பண வரவில் எந்த குறையும் இருக்காது.

துலாம் ராசி

 

உங்களுக்கு சுக்கிரன் நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றார். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். பெற்றோர்களின் மூலம் நல்ல செய்தி உங்களுக்கு தேடி வரும். சொத்துக்களால் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பளம் உயர்வு கிடைக்கக்கூடிய சூழ்நிலை உண்டாகும். இந்த எதிர்பாராத நேரத்தில் பணவரவு இருக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

கடக ராசி

 

உங்களுக்கு சுக்கிரன் மிகவும் சாதகமாக இருக்கின்றார். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். குழந்தைகளால் உங்களுக்கு நல்ல செய்தி தேடி வரும்.

கும்ப ராசி

 

சுக்கிரனின் இடமாற்றம் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றது. புதிய தொழில் தொடங்க வருபவர்களுக்கு நல்ல காலமாக அமையும். இந்த நேரம் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். புதிய முதலீடுகள் உங்களுக்கு நல்ல பெயரை வாங்கி தரும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel