தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here We Will See The Rasis That Get Rajayoga Due To The Action Of Lord Mars

Lord Mars: விடியலை காண போகும் ராசிகள்.. செவ்வாய் தரும் யோகங்கள்

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 25, 2024 02:15 PM IST

செவ்வாய் பகவானின் செயலால் ராஜயோகத்தை பெறுகின்ற ராசிகளை இங்கே காண்போம்.

செவ்வாய் பகவான்
செவ்வாய் பகவான்

ட்ரெண்டிங் செய்திகள்

நவகிரகங்களின் இடமாற்றத்தை பொறுத்தே ஒருவரின் ஜாதகம் அமையும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் செவ்வாய் பகவானும் தன்னுடைய இடத்தை மாற்றுவதற்கு குறுகிய காலம் எடுத்துக் கொள்கிறார் இதனுடைய தாக்கம் 12 ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும்.

தற்போது தனுசு ராசியில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகிறார். தனுசு ராசியில் உதயமாகி பிப்ரவரி மாதம் வரை தனது பயணத்தை மேற்கொள்ள உள்ளார். இந்த செயல்பாடு 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் சில ராசிகள் யோகத்தை பெற்றுள்ளனர் அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

 

செவ்வாய் பகவான் உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் உதயமாகின்ற காரணத்தினால் உங்களுக்கு பல்வேறு விதமான அனுபவங்கள் கிடைக்கும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். நினைத்த காரியங்கள் அனைத்தும் நடக்கும். வெளிநாட்டில் வேலை செய்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும்.

ரிஷப ராசி

 

உங்கள் ராசியில் எட்டாவது வீட்டில் செவ்வாய் பகவான் உதயமாகி உள்ள காரணத்தினால் உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். பெற்றோர்கள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் விலகும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். காரணம் இல்லாமல் ஏற்பட்டிருந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். வேலை செய்யும் இடத்தில் பணிச்சுமை குறையும் கடின உழைப்பு உங்களை முன்னேற்றத்தை கொண்டு செல்லும்.

மிதுன ராசி

 

செவ்வாய் பகவான் உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் உதயமாகின்றார். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். வெளியூர் பயணம் உங்களுக்கு சாதகமாக அமையும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். அன்புக்குரியவர்களுடன் புரிதல் ஏற்படும்.

கடக ராசி

 

உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் செவ்வாய் உதித்துள்ளார். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். மகிழ்ச்சியான வாழ்க்கை உண்டாகும். பெற்றோரின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சி ஏற்படும். புதிய வேலைக்கு மாறுவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். கடன் வாங்கும் சூழ்நிலை இத்தோடு முடிவடையும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். பணவரவில் எந்த குறையும் இருக்காது. செலவுகளை கட்டுப்படுத்தினால் சேமிப்பு அதிகரிக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

 

 

 

 

 

 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.