தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here We Will See The Rasis That Get Lord Venus Yoga

Lord Venus: சுக்கிர இடப்பெயர்ச்சி.. கொட்டும் அதிர்ஷ்டம் இந்த ராசிகளுக்கு தான்

Suriyakumar Jayabalan HT Tamil
Feb 09, 2024 11:49 AM IST

Lord Venus: சுக்கிர பகவான் யோகத்தை பெறுகின்ற ராசிகளை இங்கே காண்போம்.

சுக்கிர பகவான்
சுக்கிர பகவான்

ட்ரெண்டிங் செய்திகள்

சுக்கிர பகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான செல்வங்களும் கிடைக்கும் என கூறப்படுகிறது. சுக்கிர பகவான் அசுரர்களின் குருவாக திகழ்ந்து வருகின்றார்.

செல்வத்தை அள்ளித் தரும் கிரகமாக விளங்கக்கூடிய சுக்கிர பகவான் இந்த மாதம் மகர ராசியில் நுழைய போகின்றார். வரும் மார்ச் மாதம் மீன ராசியில் நுழைகின்றார். சுக்கிர பகவான் உச்ச ராசியான மீன ராசியில் வரும் பிப்ரவரி மார்ச் 31ஆம் தேதி அன்று நுழைகின்றார்.

பொதுவாக இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு நல்ல மாற்றங்கள் கிடைக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மிதுன ராசி

 

சுக்கிர பகவான் உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் நுழையப் போகின்ற காரணத்தினால் உங்களுக்கு சாதகமான சூழ்நிலை அனைத்தும் நடக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். இன்பங்கள் அனைத்தும் உங்களுக்கு கிடைக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பெற்றோரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

கன்னி ராசி

 

சுக்கிரன் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றார். உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் சஞ்சாரம் செய்ய உள்ளார். அனைத்து விதமான சுப பலன்களும் உங்களுக்கு கிடைக்கும். பண வரவில் இந்த குறையும் இருக்காது. தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக நடக்கும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாக்கும். அதே சமயம் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது.

கடக ராசி

 

சுக்கிர பகவான் உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் அமர்ந்த காரணத்தினால் உங்களுக்கு சிறப்பான யோகங்கள் கிடைக்கப் போகின்றன. அரசியல் துறையில் இருப்பவர்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். திடீரென பெரிய பெரிய துறைகளில் உள்ளவர்களிடம் அறிமுகம் கிடைக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். அரசு துறையில் முன்னேற்றம் உண்டாகும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.