தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here We Will See The Rasis That Are Ruled By Lord Mars

செவ்வாய் கொட்டும் யோகம்.. அனுபவிக்க போகும் ராசிகள்.. அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும்

Suriyakumar Jayabalan HT Tamil
Mar 24, 2024 04:03 PM IST

Lord Mars: சனி மற்றும் செவ்வாய் இருவரும் ஒன்று சேர்ந்துள்ளனர். செவ்வாய் பகவான் கும்ப ராசியில் நுழைந்துள்ளதால் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிப்பது உறுதி என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கே காணலாம்.

செவ்வாய் பகவான்
செவ்வாய் பகவான்

ட்ரெண்டிங் செய்திகள்

செவ்வாய் பகவான் கடந்த மார்ச் 15ஆம் தேதி அன்று சனிபகவானின் சொந்த ராசியான கும்ப ராசியில் குடியேறினார். ஏற்கனவே சனிபகவான் கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். தற்போது சனி மற்றும் செவ்வாய் இருவரும் ஒன்று சேர்ந்துள்ளனர்.

இவர்களுடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் செவ்வாய் பகவான் கும்ப ராசியில் நுழைந்துள்ளதால் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிப்பது உறுதி என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கே காணலாம்.

ரிஷப ராசி

 

செவ்வாய் பகவான் உங்கள் ராசியில் நன்மைகளை அள்ளிக் கொடுக்கப் போகின்றார். பணவரவில் இந்த குறையும் இருக்காது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். பெற்றோரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் விலகும். பொறுமையாக இருந்தால் காரியங்கள் உங்களுக்கு ஏற்றவாறு நடக்கும். நண்பர்களால் உதவி கிடைக்கும். உறவினர்களால் உங்களுக்கு ஆதரவு கிடைக்கும்.

விருச்சிக ராசி

 

உங்களுக்கு செவ்வாய் பகவான் சாதகமான பலன்களை கொடுக்கப் போகின்றார். உங்கள் ராசியின் அதிபதியாக செவ்வாய் பகவான் திகழ்ந்து வருகின்றார் உங்கள் ராசியில் நான்காவது வீட்டில் செவ்வாய் குடியேறி உள்ள காரணத்தினால் உங்களுக்கு புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பெற்றோரின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். பண முதலீடுகள் உங்களுக்கு ஏற்றவாறு முன்னேற்றத்தைக் கொடுக்கும். சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் விலகும். நிலம் சம்பந்தப்பட்ட தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரம் மற்றும் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.

தனுசு ராசி

 

செவ்வாய் பகவானின் இடமாற்றம் உங்களுக்கு நல்ல யோகத்தை கொடுக்கப் போகின்றது. உங்கள் ராசியில் மூன்றாவது வீட்டில் செவ்வாய் பயணம் செய்து வருகின்றார். இதனால் மன தைரியம் மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும் பணம் சேமிப்பு அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களால் உங்களுக்கு உதவி கிடைக்கும். குழந்தைகளால் உங்களுக்கு மகிழ்ச்சி ஆன செய்தி தேடி வரும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பண வரவில் எந்த குறையும் இருக்காது. தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel