Guru 2024: குரு கொட்டும் யோகத்தை பெறுகின்ற ராசிகள்
குரு பகவானால் சிறப்பான வாழ்க்கையில் பெருகின்ற ராசிகளை இங்கே காண்போம்.
நவகிரகங்களில் குரு பகவான் மங்கல நாயகனாக விளங்கி வருகிறார். இவர் ஒரு அரசியல் சஞ்சாரம் செய்யும் ஒரு வருட காலம் எடுத்துக் கொள்கிறார். குருபகவான் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக விளங்கி வருகிறார்.
குரு பகவானின் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது குருபகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்லும்போது 12 ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் ஏற்படும். குரு பகவான் ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான செல்வங்களும் கிடைக்கும் என கூறப்படுகிறது.
அந்த வகையில் குரு பகவான் கடந்த டிசம்பர் 31ம் தேதி அன்று வக்ர நிவர்த்தி அடைந்தார். வரும் மே ஒன்றாம் தேதி அன்று மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார். குரு பகவானின் இந்த பயணமானது 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
ரிஷப ராசி
குரு பகவான் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றார். உங்களுடைய பேச்சில் இனிமை அதிகரிக்கும். நம்பிக்கை அதிகரிப்பதால் பணவரவு அதிகரிக்கும். பொறுமையாக இருந்தால் அனைத்தும் உங்களை வந்து சேரும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது.
மிதுன ராசி
குரு பகவான் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றார். தன்னம்பிக்கை அதிகரிப்பதால் உங்களுக்கு எடுத்த காரியங்கள் நிறைவேறும். மனதில் இருந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். அதே சமயம் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கொடுக்க அதிக வாய்ப்பு உள்ளது. உங்கள் மனதிற்கு ஏற்ற இடம் மாற்றம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.
கடக ராசி
குரு பகவான் உங்களுக்கு யோகத்தை கொடுக்க போகின்றார். பணவரவில் எந்த குறையும் இருக்காது. வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் சற்று கவனமாக இருக்க வேண்டும். முழுமையான நம்பிக்கை இருந்தால் எடுத்த காரியங்கள் அனைத்தும் லாபகரமாக அமையும்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9