வெறி பிடித்து வேட்டையாடும் செவ்வாய்.. இனி பண மூட்டையில் உறங்கும் ராசிகள்.. அதிர்ஷ்டம் கொட்டுமாம்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  வெறி பிடித்து வேட்டையாடும் செவ்வாய்.. இனி பண மூட்டையில் உறங்கும் ராசிகள்.. அதிர்ஷ்டம் கொட்டுமாம்!

வெறி பிடித்து வேட்டையாடும் செவ்வாய்.. இனி பண மூட்டையில் உறங்கும் ராசிகள்.. அதிர்ஷ்டம் கொட்டுமாம்!

Suriyakumar Jayabalan HT Tamil
Published Oct 23, 2024 04:28 PM IST

Lord Mars: செவ்வாய் பகவானின் கடக ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் நிதி ஆதாயத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

வெறி பிடித்து வேட்டையாடும் செவ்வாய்.. இனி பண மூட்டையில் உறங்கும் ராசிகள்.. அதிர்ஷ்டம் கொட்டுமாம்!
வெறி பிடித்து வேட்டையாடும் செவ்வாய்.. இனி பண மூட்டையில் உறங்கும் ராசிகள்.. அதிர்ஷ்டம் கொட்டுமாம்!

இது போன்ற போட்டோக்கள்

அந்த வகையில் செவ்வாய் பகவான் அக்டோபர் 20ஆம் தேதி அன்று கடக ராசிக்குச் சென்றார். செவ்வாய் பகவானின் கடக ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் நிதி ஆதாயத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

மிதுன ராசி

செவ்வாய் பகவானின் கடக ராசி பயணம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. பணவரவியல் இருந்து குறையும் இருக்காது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பேச்சு திறமையால் காரியங்கள் அனைத்தும் வெற்றியடையும். இந்த காலகட்டத்தில் உங்களுக்கு எதிர்பாராத முன்னேற்றம் கிடைக்கும். 

குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உடன் பிறந்தவர்களால் உங்களுக்கு உதவி கிடைக்கும். அனைவருடைய ஒத்துழைப்பும் உங்களுக்கு கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அதிக லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும்.

விருச்சிக ராசி

செவ்வாய் பகவானின் சஞ்சாரம் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகளை அள்ளிக் கொடுக்கும். உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு நல்ல காலம் தொடங்கி உள்ளது. அனைத்து முயற்சிகளும் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை பெற்று தரும். பணவரவில் எந்த குறையும் இருக்காது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். 

சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். வீட்டில் மங்கள காரியங்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் உங்களுக்கு சிறப்பான முன்னேற்றம் இருக்கும்.

துலாம் ராசி

செவ்வாய் பகவானின் இடமாற்றம் உங்களுக்கு சுபகாலமாக அமைந்துள்ளது. கர்ம பாவங்களிலிருந்து உங்களுக்கு நிவர்த்தி கிடைக்கும். பண வரவில் இருந்த குறையும் இருக்காது. அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களை தேடி வரும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலை விரிவு படுத்தக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வணிகத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். பொருளாதார ரீதியாக உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். 

உன் வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். சக ஊழியர்களால் உங்களுக்கு முன்னேற்றம் இருக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். உறவினர்களால் உங்களுக்கு ஏற்பட்டு வந்து சிக்கல்கள் அனைத்தும் குறையும். நண்பர்களால் உங்களுக்கு உதவி கிடைக்கும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.