தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Lord Rahu Yoga: ராகுவிடம் சிக்கிக்கொண்ட ராசிகள்.. தண்ணி காட்டப் போகிறார் ராகு.. கஷ்டப்பட போவது உறுதி

Lord Rahu Yoga: ராகுவிடம் சிக்கிக்கொண்ட ராசிகள்.. தண்ணி காட்டப் போகிறார் ராகு.. கஷ்டப்பட போவது உறுதி

Suriyakumar Jayabalan HT Tamil
May 23, 2024 03:00 PM IST

Lord Rahu Yoga: ராகு பகவானின் வக்கிர நிலை பயணமானது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த 2024 ஆண்டு முழுவதும் மீன ராசியில் பயணம் செய்யும் ராகு பகவானால் ஒரு சில ராசிகள் மிகவும் கவனமாக எடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

ராகுவிடம் சிக்கிக்கொண்ட ராசிகள்.. தண்ணி காட்டப் போகிறார் ராகு.. கஷ்டப்பட போவது உறுதி
ராகுவிடம் சிக்கிக்கொண்ட ராசிகள்.. தண்ணி காட்டப் போகிறார் ராகு.. கஷ்டப்பட போவது உறுதி

ராகு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார். கடந்தாண்டு அக்டோபர் மாத இறுதியில் ராகு பகவான் மீன ராசியில் பயணம் செய்யத் தொடங்கினார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்தார்.

ராகு பகவானின் வக்கிர நிலை பயணமானது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த 2024 ஆண்டு முழுவதும் மீன ராசியில் பயணம் செய்யும் ராகு பகவானால் ஒரு சில ராசிகள் மிகவும் கவனமாக எடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

கன்னி ராசி

உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் ராகு பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு டிசம்பர் மாதம் வரை சிரமங்கள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். 

வேலை செய்யும் இடத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தொழில் மற்றும் வியாபாரத்தில் கவனமாக இருப்பது நல்லது. காதல் வாழ்க்கையின் சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. 

திருமணமானவர்களின் வாழ்க்கையில் மனக்கசப்புகள் அதிகரிக்க கூடிய சூழ்நிலை உண்டாகும். எனவே அனைத்து காரியங்களிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

தனுசு ராசி

உங்கள் ராசிகள் நான்காவது வீட்டில் ராகு பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. ஆடம்பர செலவுகள் அதிகரிக்கப்படும் பண சிக்கல்கள் ஏற்படக்கூடும். 

குடும்பத்தில் மனக்கசப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பேச்சால் உங்களுக்கு அதிகம் சிக்கல்கள் ஏற்படும். எனவே வார்த்தைகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மற்றவர்களிடம் பேசும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். 

இல்லை என்றால் உங்களுக்கு சிக்கல்கள் ஏற்படக்கூடும். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்தி உங்களை காப்பாற்றிக் கொள்வது நல்லது.

கும்ப ராசி

உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் ராகு பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு டிசம்பர் மாதம் வரை சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. செலவுகள் அதிகரிப்பதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். 

உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். தேவையற்ற அதிக செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. பல்வேறு விதமான சங்கடங்களை நீங்கள் நேரில் சந்திக்க நேரிடும். புதிய முதலீடுகளை தற்போது தவிர்ப்பது நல்லது. 

அனுபவசாலிகளிடம் ஆலோசனை பெற்று புதிய காரியங்களில் இறங்கினால் நன்மை உண்டாகும். பெரிய நிதி இழப்பு உங்களுக்கு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel