தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  குரு பதட்டத்தில் பணமழை.. பறவையாக பறந்து வரும் பணத்தை மூட்டையாக அல்ல போகும் ராசிகள்.. யோகம் யாருக்கு?

குரு பதட்டத்தில் பணமழை.. பறவையாக பறந்து வரும் பணத்தை மூட்டையாக அல்ல போகும் ராசிகள்.. யோகம் யாருக்கு?

Suriyakumar Jayabalan HT Tamil
May 03, 2024 01:02 PM IST

Guru Bhagavan: குரு பகவானின் ராசி மாற்றம் மட்டுமல்லாத அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். வரும் அக்டோபர் ஒன்பதாம் தேதி அன்று ரிஷப ராசியில் வக்ர நிலையில் குருபகவான் பயணம் செய்து உள்ளார்.

குரு
குரு

இதுவரை மேஷ ராசியில் பயணம் செய்து வந்த குரு பகவான் கடந்த மே ஒன்றாம் தேதி அன்று ரிஷப ராசிக்கு இடம் மாறினார் இது சுக்கிர பகவானின் ராசியாகும். இந்த ஆண்டு மிகப்பெரிய கிரகங்கள் இடப்பெயர்ச்சி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறார். குரு பகவான் குரு பகவான் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

இவர் தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். குரு பகவானின் ராசி மாற்றம் மட்டுமல்லாத அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். வரும் அக்டோபர் ஒன்பதாம் தேதி அன்று ரிஷப ராசியில் வக்ர நிலையில் குருபகவான் பயணம் செய்து உள்ளார். குரு பகவானின் இந்த இடமாற்றத்தால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

 

குருபகவான் இரண்டாவது இடத்தில் பயணம் செய்து வருகின்றார். எதனால் உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும். தொழில் ரீதியாக முன்னேற்றம் உண்டாகும். குரு பகவானின் அருளால் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.

ரிஷப ராசி

 

உங்கள் ராசிகள் முதல் வீட்டில் குருபகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டம் தேடி வரும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். கடன் சிக்கல்கள் அனைத்தும் விலகும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். வருமானத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.

மிதுன ராசி

 

உங்கள் ராசிகள் 12வது வீட்டில் குருபகவான் பயணம் செய்து வருகின்றார். புதிய நண்பர்களால் உங்களுக்கு முன்னேற்றம் இருக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். புதிய தொழில் தொடங்குவதற்கான சூழ்நிலைகள் அமையும். நல்ல முன்னேற்றம் உங்களுக்கு கிடைக்கும். திருமணமான தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.

கடக ராசி

 

உங்கள் ராசியில் குரு பகவான் 11ஆவது வீட்டில் பயணம் செய்து வருகின்றார். உங்களுக்கு வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உயர் அலுவலர்களோடு இணக்கமான சூழ்நிலை உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். ஆகஸ்ட் மாதத்தில் இருந்து உங்களுக்கு நல்ல யோகம் கிடைக்கப் போகின்றது உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

 

WhatsApp channel