தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here We Will See The Rasis In Which Guru Bhagavan Gets Raja Yoga This 2024

Guru Bhagavan: குரு செய்யாமல் விடமாட்டார்.. அதிர்ஷ்டம் தேடி வருகிறது..3 ராசிகளுக்கு பணமழை யோகம்

Suriyakumar Jayabalan HT Tamil
Mar 15, 2024 02:59 PM IST

Guru Bhagavan: ரிஷப ராசி சுக்கிர பகவானின் சொந்த ராசியாகும். 2024 ஆம் ஆண்டு பிற்பகுதியில் குரு பகவான் ரிஷபத்தில் பயணம் செய்கின்ற காரணத்தினால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் இருந்தாலும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர்.

குரு பெயர்ச்சி
குரு பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

குரு பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். குருபகவான் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். குரு பகவான் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார். வரும் மே ஒன்றாம் தேதியன்று ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார். இதனால் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் இருக்கும்.

ரிஷப ராசி சுக்கிர பகவானின் சொந்த ராசியாகும். 2024 ஆம் ஆண்டு பிற்பகுதியில் குரு பகவான் ரிஷபத்தில் பயணம் செய்கின்ற காரணத்தினால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் இருந்தாலும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

குருபகவான் உங்கள் ராசிகள் முதல் வீட்டில் அமர்கின்ற காரணத்தினால் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும் நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். வேலை சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். பயணங்கள் நல்ல பலன்களை பெற்றுத் தரும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்து சிக்கல்கள் குறையும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கைகூடும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். குழந்தைகளால் நல்ல செய்தி உங்களைத் தேடி வரும்.

விருச்சிக ராசி

 

குருபகவான் உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் சஞ்சாரம் செய்ய உள்ள காரணத்தினால் உங்களுக்கு திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும். திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் முடிவுக்கு வரும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய மாற்றங்கள் உண்டாகும். கூட்டுத் தொழில் முயற்சிகள் உங்களுக்கு முன்னேற்றத்தைப் பெற்றுத் தரும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். மேலும் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.

மேஷ ராசி

 

உங்கள் ராசியில் குரு பகவான் இரண்டாவது வீட்டில் பயணம் செய்ய உள்ளார். இதனால் நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். நிதி நிலைமையில் எதிர்பாராத நேரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பேச்சு திறமையால் மற்றவர்களை உங்களுக்கு சாதகமாக மாற்றிக் கொள்வீர்கள். வேலை செய்யும் இடத்தில் முன்னேற்ற வாய்ப்புகள் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வியாபாரம் மற்றும் தொழில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel