தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here We Will See The Rasis Caught In The Fierce Gaze Of Lord Saturn

சனி உச்ச கோபம்.. 10 மாதம் சிதைக்காமல் விடமாட்டார்.. முரட்டடி வாங்க போகும் ராசிகள்.. தப்பிச்சுக்கோங்க

Suriyakumar Jayabalan HT Tamil
Mar 16, 2024 10:06 AM IST

Lord Saturn: 30 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ராசியில் பயணம் செய்கிறார். இந்த 2024 ஆம் ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். சனி பகவானின் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

சனி
சனி

ட்ரெண்டிங் செய்திகள்

குறிப்பாக ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல சனிபகவான் 2 1/2 ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக விளங்கி வருகின்றார். இந்த தற்போது தனது சொந்த ராசியான கும்பராசியில் சனிபகவான் பயணம் செய்து வருகின்றார்.

30 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ராசியில் பயணம் செய்கிறார். இந்த 2024 ஆம் ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். சனி பகவானின் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

சனிபகவான் ஒருவருடைய ஜாதகத்தில் நல்ல நிலைமையில் இருந்தால் அவர்களுக்கு அனைத்து விதமான காரியங்களையும் வெற்றியோடு செய்து கொடுப்பார். ஒருவேளை அவருடைய பார்வை மிகவும் கோபமாக இருந்தால் பல்வேறு விதமான துன்பங்களை கொடுப்பார். அது அவர்களின் செய்வினைகளுக்கு ஏற்ப திருப்பிக் கொடுக்கும் கர்ம பலன்கள் ஆகும். இந்நிலையில் சனிபகவானின் உக்கிர பார்வையானது ஒரு சில ராசிகளின் மீது விழுகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

கடக ராசி

 

சனிபகவானின் கோபமான பார்வை உங்கள் மீது விழுகின்ற காரணத்தினால் உங்களுக்கு பல்வேறு விதமான இழப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கஷ்டங்கள் ஏற்படக்கூடும். எடுத்த காரியங்களில் தடைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. வேலை செய்யும் இடத்தில் பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்படக்கூடும். உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வாழ்க்கையில் பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்படக்கூடும். அடுத்த பத்து மாத காலம் உங்களுக்கு மிகவும் சிரமமாக இருக்கும்.

விருச்சிக ராசி

 

சனி பகவானின் உக்கிரமான பார்வை உங்களுக்கு சில சிரமங்களை உருவாக்கப் போகின்றது. பல்வேறு விதமான சிக்கல்களை நீங்கள் சந்திக்க நேரிடும். குறிப்பாக பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் சிரமங்கள் ஏற்படக்கூடிய சூழ்நிலை உண்டாகும். பத்து மாத காலத்திற்கு சனி பகவானின் கஷ்டம் உங்களுக்கு வந்து கொண்டே இருக்கும். எனவே கவனமாக இருக்க வேண்டும்.

மகர ராசி

 

சனிபகவானின் கோபமான பார்வை உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்களை கொடுக்கக்கூடும். அதே சமயம் உங்களுக்கு ஏழரை சனியின் இறுதி கட்டம் நடந்து கொண்டிருக்கின்ற காரணத்தினால் சிரமங்கள் உக்கரத்தில் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் மன அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. தனிப்பட்ட வாழ்க்கையில் சில சிரமங்கள் ஏற்படும். திட்டமிட்டு செயல்பட்டால் முன்னேற்றம் உண்டாகும். இருப்பினும் துயரங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

 

 

WhatsApp channel