தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here We Will See The Rasis Associated With Lord Mercury

சிக்கி சிதைக்க போகிறார் புதன்.. மாட்டிக் கொண்ட ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Mar 07, 2024 02:58 PM IST

புதன் பகவானிடம் சிக்கிக்கொண்ட ராசிகளை இங்கே காண்போம்.

புதன் பெயர்ச்சி
புதன் பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

புதன் பகவான் குறுகிய காலத்தில் இடம் மாறினாலும் அவருடைய தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். புதன் பகவான் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். புதன் பகவான் இன்று அதாவது மார்ச் 7ஆம் தேதி குரு பகவானின் ராசியான மீன ராசியில் நுழைந்தார்.

புதன் மீன ராசிகளின் நுழைந்த காரணத்தினால் இதனுடைய தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

கடக ராசி

 

உங்கள் ராசியில் ஏழாவது வீட்டிற்கு புதன் பகவான் செல்கின்றார். இதனால் உங்களுக்கு செலவுகள் அதிகரிக்க கூடிய சூழ்நிலை உண்டாகும். நிறைய பணம் செலவழிக்க வேண்டிய சூழ்நிலை அமையும். மதிப்புமிக்க பொருட்கள் மீது கவனம் தேவை பயணங்கள் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உங்கள் உடமைகள் மீது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் மன உளைச்சல் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. தொழில் மற்றும் வியாபாரம் சற்று மந்தமாக இருக்கும்.

சிம்ம ராசி

 

உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் புதன் நுழைந்துள்ளார். இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரும். வேலை செய்யும் இடத்தில் புதிய சவால்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கஷ்டப்பட வேண்டிய சூழ்நிலை உருவாகும். குடும்ப உறுப்பினர்களோடு மன உளைச்சல் ஏற்படும். பல்வேறு விதமான சிக்கல்களை சந்திக்க நேரிடும் எனவே எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

கும்ப ராசி

 

உங்கள் ராசிகள் இரண்டாவது வீட்டிற்கு புதன் செல்கின்றார். இதனால் உங்களுக்கு நிதி இழப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. தேவையில்லாத பள்ளிகள் உங்கள் மீது வந்துவிடும். மன உளைச்சல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. திருமண வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்படக்கூடும். தேவையில்லாத செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. நிதி சம்பந்தப்பட்ட விஷயங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உங்களுக்கு ஏழரை சனி நடந்து கொண்டிருப்பதால் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel