Mercury: அஸ்தமனமாகும் புதன்.. கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் இவர்கள்தான்
புதன் பகவானிடம் சிக்கிக்கொண்ட ராசிகளை இங்கே காண்போம்.

நவகிரகங்களின் இளவரசனாக புதன் பகவான் விளங்கி வருகின்றார். இவர் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர் புதன் பகவான் கல்வி, அறிவு, அழகு, காதல், புத்திசாலித்தனம், நரம்பு, வியாபாரம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். புதன் பகவான் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர்.
இது போன்ற போட்டோக்கள்
Feb 14, 2025 10:18 AMLucky Zodiac : நான்கு கிரகங்களின் அற்புதமான சேர்க்கை.. இந்த 5 ராசிக்காரர்களுக்கு யோகம்.. வாழ்க்கையில் மாற்றம் நிகழும்!
Feb 14, 2025 10:03 AMValentine Day Remedy : காதல் வாழ்க்கையை மேம்படுத்த காதலர் தினத்தில் இதை செய்யுங்கள்.. உறவு வலுவாக இருக்குமாம்!
Feb 14, 2025 07:00 AMGuru Horoscope: கொட்டிக் கொடுக்க வரும் குரு.. 2025-ல் கோடீஸ்வர 3 ராசிகள்.. மகிழ்ச்சி தாண்டவம் ஆடுமா?
Feb 14, 2025 05:00 AMToday Rasipalan : 'கவனமா பேசுங்க.. வெற்றி வந்து சேரும்' இன்று பிப்.14 மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்கள் இதோ!
Feb 13, 2025 05:45 PMChevvai Rasis: பின்பக்கமாக வரும் செவ்வாய்.. 2025 முதல் முன்பக்கத்தில் பணம் கொட்டும் ராசிகள்.. விரைவில் டும் டும் டும்?
Feb 13, 2025 04:41 PMHides Emotions : இந்த ராசிக்காரர்களை புரிந்து கொள்வது ரொம்ப கஷ்டமாம்.. உணர்ச்சிகளை ரகசியமாக வைத்திருப்பார்கலாம்!
இவருடைய இடமாற்றம் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். புதன் பகவான் கன்னி மற்றும் மிதுன ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். தற்போது புதன் பகவான் சனி பகவானின் ராசியான மகர ராசியில் பயணம் செய்து வருகின்றார். கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி அன்று மகர ராசியில் அஸ்தமனமானார்.
புதன் பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் புதன் பகவான் அஸ்தமனம் ஆனது சில ராசிகளுக்கு சிக்கல்களை ஏற்படுத்த உள்ளது. அவ்வாறு புதன் பகவானால் கஷ்டப்பட போகும் சில ராசிகளை குறித்து இங்கே காண்போம்.
மேஷ ராசி
புதன் பகவான் உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் அஸ்தமனமாக உள்ளார். உங்களுக்கு வேலை செய்யும் இடத்தில் பல்வேறு விதமான தடைகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. உயர் அலுவலர்களிடம் பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சக ஊழியர்களோடு மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பேசும்போது சிந்தித்துப் பேச வேண்டும். கருத்து வேறுபாடுகள் குடும்பத்தில் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். புதிய முதலீடுகள் செய்யும்போது எச்சரிக்கையாக இருப்பது நல்லது. வியாபாரத்தில் நஷ்டங்கள் ஏற்படக்கூடிய சூழ்நிலை உண்டாகும்.
மிதுன ராசி
உங்கள் ராசியில் எட்டாவது வீட்டில் புதன் பகவான் அஸ்தமனமாகியுள்ளார். அதனால் உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் சிக்கல்கள் ஏற்படாதீர்கள். வாய்ப்பு உள்ளது. குடும்பம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மற்றவர்களோடு பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் மன அழுத்தம் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. உடன் வேலை செய்பவர்களோடு வாக்குவாதத்தில் ஈடுபடக்கூடிய சூழ்நிலை உண்டாகும். நிதி இழப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
சிம்ம ராசி
உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் புதன் அஸ்தமனம் ஆகின்றார். இதனால் உங்களுக்கு பணம் இழப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பெரிய முதலீடுகள் செய்வதை தவிர்ப்பது நல்லது. வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் சற்று தாமதமாக கிடைக்கும். அலுவலகத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9
