Tamil News  /  Astrology  /  Here We Will See The Rasis Associated With Lord Mercury

Mercury: புரட்டி பொங்கல் வைக்க போகும் புதன்.. சிக்கிக்கொண்ட ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Feb 04, 2024 02:01 PM IST

Transit of Mercury: புதன் பகவானிடம் சிக்கிக்கொண்ட ராசிகளை இங்கே காண்போம்.

புதன் பெயர்ச்சி
புதன் பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

நவகிரகங்களும் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள். அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள். அந்த வகையில் புதன் பகவான் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றுவார். இவருடைய இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

புதன் பகவானின் இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இவர் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். தனுசு ராசியில் புதன் பகவான் பயணம் செய்து வந்தார்.

பிப்ரவரி ஒன்றாம் தேதி அன்று மகர ராசியில் நுழைந்தார். புதன் பகவானின் இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் ஒரு சில ராசிகள் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

கடக ராசி

 

புதன் பகவான் உங்களுக்கு சாதகமற்ற சூழ்நிலைகளை கொடுக்கப் போகின்றார். பணவரவு சிக்கல்கள் இருக்கக்கூடிய சூழ்நிலை உருவாகும். செலவுகள் அதிகமாக வாய்ப்பு உள்ளது. மதிப்புமிக்க பொருட்கள் மீது கவனம் அதிகமாக இருக்க வேண்டும். பண இழப்பீடு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. பயணங்கள் உங்களுக்கு நல்ல பலன்களை அளிக்காது. வெளியே செல்லும்போது உடைமைகள் மீது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

சிம்ம ராசி

 

உங்கள் ராசியில் இரண்டு மற்றும் 11வது வீட்டில் அதிபதியாக புதன் பகவான் திகழ்ந்து வருகின்றார். தற்போது உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் நுழையப் போகின்றார். இவருடைய இடமாற்றம் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்களை உருவாக்கும். கடின உழைப்பு மட்டுமே உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரும். வேலை செய்யும் இடத்தில் பல்வேறு விதமான சவால்கள் உருவாக நேரிடும்.

உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குடும்ப உறுப்பினர்களிடம் பேசும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வீட்டு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உங்களை நோக்கி வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. புதன் பகவானால் பாதிக்கப்பட்ட நீங்கள் விஷ்ணு பகவானை வழிபட்டால் முன்னேற்றம் உண்டாகும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.