தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here We Will See The Rasis Afflicted By Lord Mercury

அஸ்தமனத்தில் அடிக்கும் புதன்.. சிக்கிக்கொண்ட ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Feb 29, 2024 03:46 PM IST

Mercury: புதன் பகவானால் கஷ்டப்படும் ராசிகளை இங்கே காண்போம்.

புதன் பெயர்ச்சி
புதன் பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

புதன் பகவானின் இடமாற்றமானது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். ராசி மாற்றம் மட்டுமல்லாது நவகிரகங்களின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் புதன் பகவான் மிதுன மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார்.

தற்போது சனி பகவானின் ராசியான மகர ராசியில் பயணம் செய்து வரும் புதன் பகவான் கடந்த பிப்ரவரி 8-ம் தேதி அன்று மகர ராசியில் அஸ்தமனமானார். அடுத்த ஒரு மாத காலத்திற்கு சில ராசிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

 

உங்கள் ராசிகள் பத்தாவது வீட்டில் புதன் அஸ்தமனம் ஆகியுள்ளார். உங்களுக்கு காரியங்களில் பல்வேறு விதமான தடைகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. வேலை செய்யும் இடத்தில் சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைக்கச் சற்று தாமதமாகும். வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உயர் அலுவலர்களோடு பேசும்போது எச்சரிக்கையாக இருப்பது நல்லது. நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது.

மிதுன ராசி

 

உங்கள் ராசிகள் எட்டாவது வீட்டில் புதன் அஸ்தமனம் ஆகி உள்ளார். இதனால் உங்களுக்கு பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் தட்டுப்பாடு ஏற்படக்கூடிய சூழ்நிலை உண்டாகும். குடும்பத்தில் சில சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கூட்டுத்தொழில் முயற்சிகள் செய்வதை தற்போது தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் மிகுந்த போட்டிகள் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் அழுத்தம் ஏற்படக்கூடிய சூழ்நிலை உண்டாகும். உடன் பிறந்தவர்களோடு வாக்குவாதம் ஏற்படக்கூடிய சூழ்நிலை உண்டாகும். எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

சிம்ம ராசி

 

உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் புதன் அஸ்தமனம் ஆகியுள்ளார். இதனால் உங்களுக்கு பணம் இழப்புகள் ஏற்படக்கூடிய சூழ்நிலை அமையும் .பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பெரிய முதலீடுகளை தற்போது தவிர்ப்பது நல்லது. வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். புதிய முயற்சிகளை தவிர்ப்பது தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களோடு கருத்து வேறுபாடு ஏற்படக்கூடிய சூழ்நிலை அமையும். ஒட்டுமொத்தத்தில் எச்சரிக்கையாக இருங்கள்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel