Tamil News  /  Astrology  /  Here We Will See The Problems That Rahu Transit Can Cause To The Three Rasis

Rahu: 3 ராசிகளுக்கு முரட்டு அடி.. ராகு பெயர்ச்சியால் சம்பவம்

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 31, 2024 04:50 PM IST

ராகு இடமாற்றத்தால் மூன்று ராசிகளுக்கு ஏற்படக்கூடிய சிக்கல்களை இங்கே காண்போம்.

ராகு பெயர்ச்சி
ராகு பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். வரக்கூடிய 2025 ஆம் ஆண்டு கும்ப ராசிக்கு ராகு பகவான் இடம் மாறுகிறார். மீன ராசிக்கு ராகு பகவான் சஞ்சாரம் செய்கின்ற காரணத்தினால் அந்த ராசிக்கு இந்த ஆண்டு சிறப்பான பலன்கள் எதுவும் இருக்காது என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

ராகு பகவானை பார்த்து எப்போதும் அச்சப்பட தேவையில்லை இருக்கும் இடத்தை கொண்டு சில சாதகமான பலன்களையும் அவர் கொடுப்பார். ஜாதகத்தில் ராகு பகவான் அசுப சூழ்நிலையில் இருந்தால் அவர்களுக்கு மோசமான பலன்கள் கிடைக்கும் சூழ்நிலை உண்டாகும். அந்த வகையில் இந்த 2024 ஆம் ஆண்டு ராகு பகவானால் சங்கடங்களை சந்திக்கப்போகும் ராசிகளை இங்கே காண்போம்.

தனுசு ராசி

 

இந்த ஆண்டு நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. ராகு பகவான் உங்கள் வாழ்க்கையில் வசதிகளை கொடுத்து அதன் பின்னர் அதனை குறைப்பார் என கூறப்படுகிறது. உங்கள் ராசியில் நான்காவது வீட்டில் சஞ்சாரம் செய்கின்ற காரணத்தினால் உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதிக கவனம் செலுத்தி உங்களது ஆரோக்கியத்தை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். அலட்சியமாக இருந்தால் அதற்குப் பின்னர் ஏற்படும் சிக்கல்களை நீங்கள் தான் சமாளிக்க வேண்டும்.

கும்ப ராசி

 

இந்த 2024 ஆம் ஆண்டு பல்வேறு விதமான சிக்கல்களை நீங்கள் ராகு பகவானால் சந்திக்க வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் அவ்வப்போது சங்கடங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. செலவுகள் அதிகரிக்க கூடிய சூழ்நிலை உண்டாகும். பயணம் செய்யும் போது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குறிப்பாக உங்கள் உடம்புகள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும். பணம் இல்லப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

கன்னி ராசி

 

ராகு பகவானின் தாக்கம் இந்த ஆண்டு உங்களுக்கு மிகவும் அதிகமாக இருக்கும். உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் ராகு சஞ்சாரம் செய்து வருகின்ற காரணத்தினால் உறவினர் மற்றும் நண்பர்களால் சில சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. காரியத்தடைகள் ஏற்படக்கூடிய சூழ்நிலை உண்டாகும். நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். காதல் வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்படக்கூடிய சூழ்நிலை உண்டாகும். தலைகளும் இல்லாமல் அனைத்து காரியங்களையும் கையாள்வது மிகவும் நல்லது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.

டாபிக்ஸ்