Lucky Rasis : 2024 - ல் பணத்தில் படுத்து உறங்க போகும் ராசிகள்
Money Yoga: புத்தாண்டில் பொருளாதாரத்தில் முன்னேற்றம் பெறுகின்ற ராசிக்காரர்கள் இங்கே காண்போம்.
நவகிரகங்களின் செயல்பாடுகளை பொறுத்து ஒருவரின் ஜாதகம் அமைவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் தற்போது பிறந்துள்ள இந்த புத்தாண்டு 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஆண்டு முழுவதும் பல்வேறு விதமான சிக்கல்களை சந்தித்தவர்களுக்கு இந்த புத்தாண்டு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
பொருளாதார ரீதியாக பெரும்பான்மையான மக்கள் மிகப்பெரிய முன்னேற்றத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர் தற்போது புத்தாண்டு பிறந்து முதல் மாதமான ஜனவரி மாதத்தில் பாதி நாட்கள் முடிந்து விட்டது.
பல கிரகங்களின் நிலைகளை பொருத்தும் ஒருவரின் வாழ்க்கையில் தாக்கம் உண்டாகும் இந்த ஆண்டு கிரகங்களின் பல்வேறு விதமான மாற்றங்கள் நிகழ உள்ளன நிகழ்ந்து வருகின்றன. அந்த வகையில் இந்த 2024 ஆம் ஆண்டு ஒரு சில ராசிகள் நிதி ரீதியாக மிகப்பெரிய முன்னேற்றத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இந்த பதிவில் காணப் போகின்றோம்.
துலாம் ராசி
இந்த 2024 ஆம் ஆண்டு உங்களுக்கு நிதி ரீதியாக மிகப்பெரிய முன்னேற்றம் இருக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். மார்ச் மாதம் தொடங்கிய பிறகு உங்களுக்கு நிதி ரீதியாக சிறப்பான பலன்கள் உண்டாகும். பண வரவில் எந்த குறையும் இருக்காது. பண வரவிற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் வருமானம் அதிகரிக்கும் கடன் சிக்கல்கள் குறையும்.
விருச்சிக ராசி
தொடங்கிய புத்தாண்டு உங்களுக்கு சிறப்பாக அமைந்துள்ளது. இந்த 2024 ஆம் ஆண்டு நிதி நிலைமையில் ஏற்பட்டு வந்த சவால்கள் அனைத்தும் குறைந்து சேமிப்பு அதிகரிக்கும். பணவரவில் இருந்த குறையும் இருக்காது. செலவுகள் கட்டுப்படும். நிதி நிலைமையில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற்றம் உண்டாகும். குரு பகவானின் பரிபூரண அருள் உங்களுக்கு கிடைக்கப் போகின்றது.
தனுசு ராசி
மிகப்பெரிய முன்னேற்றத்தை நீங்கள் காணப் போகின்றீர்கள் இந்த புத்தாண்டு உங்களுக்கு பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். இந்த 2024 ஆம் ஆண்டு உங்களுக்கு எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். பொருளாதாரத்தில் ஏற்பட்டிருந்த சிக்கல்கள் குறையும். கடன் சிக்கல்கள் விலகும். பணவரவில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் விலகி வருமானம் அதிகரிக்கும். புதிய முயற்சிகள் உங்களுக்கு ஏற்றவாறு கை கூடும்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9