தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here We Will See The People Of The Zodiac Who Get Rajayoga From Guru Bhagavan

Guru Peyarchi 2024 Palangal: குரு திகட்ட திகட்ட கொட்டுவார்.. பணமழை உறுதியானது.. யோகத்தில் வாழும் ராசிகள் இவர்கள்தான்

Suriyakumar Jayabalan HT Tamil
Mar 27, 2024 09:59 AM IST

குரு பகவானால் ராஜயோகத்தை பெறுகின்ற ராசிக்காரர்களை இங்கே காண்போம்.

குரு பெயர்ச்சி
குரு பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

குரு பகவானால் இந்த ராசிகளுக்கும் சிக்கல்கள் ஏற்படுவது கிடையாது. அவர் இருக்கும் இடத்தை பொறுத்து சுப மற்றும் அசுப பலன்கள் உண்டாக்கின்றன. குரு பகவான் ஆண்டிற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். அந்த வகையில் இந்த ஆண்டு குரு பகவான் தனது இடத்தை மாற்றுகிறார்.

தற்போது குருபகவான் மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார். வருகின்ற மே ஒன்றாம் தேதி அன்று ரிஷப ராசிக்கு இடம் வருகிறார். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். குரு பகவானின் இடமாற்றத்தால் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

மிதுன ராசி

 

குரு பகவானின் இடமாற்றம் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. உங்கள் வாழ்க்கையில் வெற்றிகள் கிடைப்பது உறுதி. பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆடம்பரம் மற்றும் வசதிகள் அதிகரிக்க கூடும். புதிய முதலீடுகள் நல லாபத்தை பெற்று தரும். திடீரென்று எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும் பண வரவிலிருந்து குறையும் இருக்காது. குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

சிம்ம ராசி

 

குருபகவானின் இடமாற்றம் உங்களுக்கு முன்னேற்றத்தை தரும். சுப பலன்களை உங்களுக்கு கிடைக்கப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். முழுமையான அதிர்ஷ்டம் உங்களை தேடி வரும். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக நடந்து கொள்வார்கள்.

கன்னி ராசி

 

குரு பகவானின் இடமாற்றத்தால் உங்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கப் போகின்றது. உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பணவரவில் இருந்து குறையும். இருக்காது வருமானம் அதிகரிக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக நடந்து கொள்வார்கள். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும்.

 

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel