தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here We Will See The People Of The Zodiac Who Are Going To Be Afflicted By Lord Sani

சனி புறப்பட்டு வருகிறார்.. உச்ச கோபத்தில் முரட்டடி.. சிக்கி சிதையும் ராசிகள் இவர்கள்தான்

Suriyakumar Jayabalan HT Tamil
Mar 24, 2024 05:33 PM IST

Saturn Transit: சனி பகவானின் ராசி மாற்றம் மட்டுமல்லாத அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் சனிபகவான் தற்போது மிகவும் கோபமான நிலையில் உக்கர பார்வையை கொடுத்து வருகிறார்.

சனி பெயர்ச்சி
சனி பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்த ராசியான கும்ப ராசியில் சனி பகவான் பயணம் செய்து வருகின்றார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். இந்த 2024 ஆம் ஆண்டு சனிபகவானின் ஆண்டாக கருதப்படுகிறது. வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை சனி பகவான் மாற்றுகிறார்.

சனி பகவானின் ராசி மாற்றம் மட்டுமல்லாத அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் சனிபகவான் தற்போது மிகவும் கோபமான நிலையில் உக்கர பார்வையை கொடுத்து வருகிறார். இந்த உக்கிர பார்வை 10 மாதங்கள் தொடரும் இதனால் சில ராசிகள் பாதிக்கப்பட உள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

கடக ராசி

 

சனி பகவானின் கோபத்தால் உங்களுக்கு சில கஷ்டமான சூழ்நிலைகள் உருவாகப் போகின்றது. எடுத்த காரியங்கள் அனைத்தும் நடைபெறுவதற்கு சற்று தாமதமாகும். அதிகப்படியான தடைகள் உங்களுக்கு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. தனிப்பட்ட வாழ்க்கையில் பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்படக்கூடும். 10 மாத காலம் சற்று மோசமான சூழ்நிலை இருக்கும் எனவே கவனமாக இருங்கள்.

விருச்சிக ராசி

 

சனி பகவானின் கோப பார்வை உங்கள் மீது விழுகின்ற காரணத்தினால் சுய வாழ்க்கையில் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். எதிரிகளால் தொல்லைகள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது கவனமாக இருங்கள்.

மகர ராசி

 

உங்களுக்கு ஏழரை சனியின் கடைசி கட்டம் நடந்து கொண்டிருக்கின்ற காரணத்தினால் இதோடு சனிபகவானின் கோபப்பார்வையும் விழுகின்றது. இதனால் வேலையில் மன அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. தனிப்பட்ட வாழ்க்கையில் சில சிக்கல்கள் ஏற்படக்கூடும். சுய ஒழுக்கம் மற்றும் பொறுப்பு இவை அனைத்தும் மிகவும் முக்கியமாகும். திட்டமிட்ட காரியங்கள் செயல்படுவதற்கு சற்று தாமதமாகும்.

கும்ப ராசி

 

சனி பகவான் உங்கள் ராசியில் பயணம் செய்து வருகின்றார். உங்களுக்கு ஏழரை சனியின் இரண்டாவது கட்டம் நடந்து கொண்டிருக்கின்றது. அவருடைய கோப பார்வையில் சிக்கிக்கொண்ட ராசிகளில் நீங்களும் ஒருவர். எனவே எச்சரிக்கையாக இருப்பது நல்லது. மற்றவர்களிடம் பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குடும்பத்தில் சிறு வாக்குவாதங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. உங்கள் கோபத்தை கட்டுப்படுத்தாவிட்டால் பெரிய இழப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது எனவே எச்சரிக்கையாக இருங்கள்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel