சனிக்கிழமை இதைச் செய்யலாமே.. வரங்களை கொட்டும் வாராகி அம்மன்.. சோழர்களின் முதல் வழிபாடு!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  சனிக்கிழமை இதைச் செய்யலாமே.. வரங்களை கொட்டும் வாராகி அம்மன்.. சோழர்களின் முதல் வழிபாடு!

சனிக்கிழமை இதைச் செய்யலாமே.. வரங்களை கொட்டும் வாராகி அம்மன்.. சோழர்களின் முதல் வழிபாடு!

Suriyakumar Jayabalan HT Tamil
Published May 17, 2025 07:00 AM IST

பிராமி, மகேஸ்வரி, வைஷ்ணவி, கௌமாரி, வாராகி, சாமுண்டி, இந்திராணி ஆகியோர் சப்த கன்னியர்களாக திகழ்ந்த வருகின்றனர். இவர்களின் மிகவும் மாறுபட்டவராக வாராகி அம்மன் திகழ்ந்து வருகின்றார். இவர் மனித உடல் மற்றும் பன்றிமுகம் கொண்டு கோபத்தின் உச்சநாயகியாக திகழ்ந்து வருகின்றார்.

சனிக்கிழமை இதைச் செய்யலாமே.. வரங்களை கொட்டும் வாராகி அம்மன்.. சோழர்களின் முதல் வழிபாடு!
சனிக்கிழமை இதைச் செய்யலாமே.. வரங்களை கொட்டும் வாராகி அம்மன்.. சோழர்களின் முதல் வழிபாடு!

இது போன்ற போட்டோக்கள்

படை தளபதி

வாராகி அம்மனின் ரத்தத்தை இழக்க கூடிய விலங்குகளாக காட்டுப்பன்றிகள் திகழ்ந்து வருகின்றன. நமது இந்தியாவில் வாராஹி அம்மனுக்கு இரண்டு இடங்களில் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. ஒன்று காசி, மற்றொன்று தஞ்சை பெருவுடையார் திருக்கோயில். இந்த வாராஹி அம்மன் அம்பிகையின் போர்படை தளபதியாக திகழ்ந்து வந்துள்ளார்.

ராஜராஜசோழன் வழிபாடு

ராஜராஜ சோழன் எந்த செயலை செய்ய தொடங்கினாலும் முதலில் வாராகி அம்மன் வழிபட்ட பின்னரே தொடங்குவார் என கூறப்படுகிறது. ராஜராஜ சோழனின் வெற்றி தெய்வமாக இந்த வாராகி அம்மன் திகழ்ந்து வந்துள்ளார். தஞ்சை பெரிய கோயில் கட்டுவதற்கு முன்பே வாராகி அம்மனுக்கு அந்த இடத்தில் வழிபாடு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

வாராகி அம்மனுக்கு முதல் பூஜை

மற்ற கோயில்களில் இருக்கும் நடைமுறை போல தஞ்சை பெருவுடையார் திருக்கோயிலில் கிடையாது. அனைத்து கோயில்களிலும் முதலில் விநாயகபெருமானை வழிபடுவது தான் மரபு. ஆனால் தஞ்சை பெருவுடையார் திருக்கோயிலில் விநாயகப் பெருமானுக்கு பதிலாக வாராகி அம்மனுக்கே முதல் வழிபாடு செய்யப்படுகிறது. சோழர்களின் வெற்றி தெய்வமாக துர்க்கை அம்மன் திகழ்ந்து வருகின்றார். அந்த துர்க்கை அம்மனின் தளபதியாக விளங்கிவரும் வாராகி அம்மனுக்கு தஞ்சை பெருவுடையார் திருக்கோயிலில் சன்னதி அமைக்கப்பட்டுள்ளது.

தஞ்சை பெருவுடையார் திருக்கோயிலில் நுழைந்ததும் இடதுபுறத்தில் வாராகி அம்மனுக்கு சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. இந்த அம்மனை வழிபட்டால் நமது வேண்டுதல்கள் உடனே நிறைவேறும் என கூறப்படுகிறது. மேலும் திருமணம் ஆகாதவர்கள் இந்த வாராகி அம்மனை வழிபட்டால் விரைவில் திருமணம் கைகூடும் என்பது ஐதீகமாக இருந்து வருகிறது.

வாராகி அம்மன் வழிபாடு

இந்த வாராகி அம்மனை வழிபட சனிக்கிழமை மிகவும் சிறந்த நாளாக கருதப்படுகிறது. சனிக்கிழமைகளில் சனி ஹோரை வரக்கூடிய நேரத்தில் வாராகி அம்மனை வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும் என கூறப்படுகிறது.

இந்த அம்மனை வழிபடுவதற்கு திருஉருவப்படம் மிகவும் கட்டாயம் என கூறப்படுகிறது. சிறிது மஞ்சள் பன்னீர் சேர்த்து குழைத்து பிள்ளையார் போல பிடித்து அதனை வாராகி அம்மனாக நினைத்து பரிகாரங்கள் செய்தால் பலன்கள் அனைத்தும் கிடைக்கும் என கூறப்படுகிறது.

சனிக்கிழமைகளில் வரக்கூடிய சனி ஹோரை நேரத்தில் வாராகி அம்மன் படத்தை துடைத்து பூக்களால் அலங்காரம் செய்து வழிபடுதல் நண்பர்களை கொடுக்கும் எனக் கூறப்படுகிறது. மேலும் செம்பருத்தி பூ மிகவும் விசேஷம் எனக் கூறப்படுகிறது. அது இல்லை என்றாலும் நீல நிற சங்கு பூ சிவப்பு நிற அரளிப்பூ கொண்டு அலங்காரம் செய்து வழிபடலாம் என கூறப்படுகிறது.

மண் அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி, 10 வெள்ளை கடுகுகளை அதனில் போட்டு தீபம் ஏற்று பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்ய வேண்டும் என கூறப்படுகிறது.

உங்கள் வாழ்க்கையில் நினைத்த காரியம் நிறைவேற வேண்டும் என்றால், சனிக்கிழமை என்று சனி ஹோரையில் வாராகி அம்மனுக்கு தீபம் ஏற்று வழிபட்டால் அனைத்தும் நிறைவேறும் என்பது ஐதீகமாக இருந்து வருகிறது.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.