மே மாதத்தில் குறி வைத்த சூரியன்.. பண வெயிலில் காயப் போகும் ராசிபலன்.. அதிர்ஷ்ட யோகம் வருகிறது
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  மே மாதத்தில் குறி வைத்த சூரியன்.. பண வெயிலில் காயப் போகும் ராசிபலன்.. அதிர்ஷ்ட யோகம் வருகிறது

மே மாதத்தில் குறி வைத்த சூரியன்.. பண வெயிலில் காயப் போகும் ராசிபலன்.. அதிர்ஷ்ட யோகம் வருகிறது

Suriyakumar Jayabalan HT Tamil
Published May 04, 2024 04:48 PM IST

Lord Surya: ஏப்ரல் 27ஆம் தேதி அன்று அஸ்வினி நட்சத்திரத்தில் இருந்து பரணி நட்சத்திரத்திற்குள் நுழைந்தார். இவருடைய நட்சத்திர இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு ராஜயோகத்தை கொடுக்கப் போகின்றது.

சூரியன்
சூரியன்

இது போன்ற போட்டோக்கள்

சூரிய பகவான் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். சூரிய பகவான் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக் கூடியவர். இவருடைய இடமாற்றத்தின் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது. சூரிய பகவான் 15 நாட்களுக்கு ஒரு முறை நட்சத்திர இடமாற்றம் செய்கிறார். சூரிய பகவான் கடந்த ஏப்ரல் 13-ஆம் தேதி அன்று மேஷ ராசியில் நுழைந்தார்.

கடந்த ஏப்ரல் 27ஆம் தேதி அன்று அஸ்வினி நட்சத்திரத்தில் இருந்து பரணி நட்சத்திரத்திற்குள் நுழைந்தார். இவருடைய நட்சத்திர இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு ராஜயோகத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

 

சூரிய பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு தொழிலில் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். வியாபாரத்தில் நல்ல லாபத்தை கொடுக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு படைக்கப்படும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். புத்திசாலித்தனமான முதலீடுகளால் உங்களுக்கு நல்ல யோகம் கிடைக்கும். உறவினர்களால் மகிழ்ச்சி உண்டாகும். குழந்தைகளால் முன்னேற்றம் இருக்கும்.

மிதுன ராசி

 

உங்கள் ராசியில் சூரிய பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும். வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். கடின உழைப்பு நல்ல பலன்களை உங்களுக்குத் தரும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். நிறைய பணம் சம்பாதிப்பதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தின் மகிழ்ச்சி அதிகரிக்கும். நண்பர்களால் உங்களுக்கு உதவி கிடைக்கும். குடும்பத்தின் முழு ஆதரவும் உங்களை தேடி வரும்.

சிம்ம ராசி

 

உங்கள் ராசியில் சூரிய பகவானின் நட்சத்திர இடம் மாற்றம் உங்களுக்கு அற்புதமான பலன்களை கொடுக்கப் போகின்றது. ஏனென்றால் இவர் உங்கள் ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். உங்கள் ஆசை அனைத்தும் நிறைவேறும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்றுத் தரும். புத்திசாலித்தனத்தால் பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டாகும். சேமிப்பு அதிகரிக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மனக்கசப்புகள் அனைத்தும் விலகும். திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

 

Whats_app_banner