தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  குரு பண மழையை பிடித்த சுக்கிரன்.. வாரி வழங்க போகிறார் வாழ்க்கை முக்கியம் குமாரு..!

குரு பண மழையை பிடித்த சுக்கிரன்.. வாரி வழங்க போகிறார் வாழ்க்கை முக்கியம் குமாரு..!

Suriyakumar Jayabalan HT Tamil
Apr 05, 2024 06:03 PM IST

சுக்கிர பகவான் வரும் ஏப்ரல் 24ஆம் தேதி அன்று மேஷ ராசியில் நுழைகின்றார். இதனால் குரு மற்றும் சுக்கிரன் இவர்கள் இருவரும் ஒன்று சேர்கின்றனர். இவர்களுடைய சேர்க்கை அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர்.

குருபகவான்
குருபகவான்

நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்க கூடியவர் சுக்கிர பகவான். இவர் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இவர் ஆடம்பரம், சொகுசு, செழிப்பு, காதல், வியாபாரம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.

சுக்கிர பகவான் வரும் ஏப்ரல் 24ஆம் தேதி அன்று மேஷ ராசியில் நுழைகின்றார். இதனால் குரு மற்றும் சுக்கிரன் இவர்கள் இருவரும் ஒன்று சேர்கின்றனர். இவர்களுடைய சேர்க்கை அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

 

குரு மற்றும் சுக்கிரன் சேர்க்கை உங்களுக்கு நல்ல பலன்களை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. வெற்றி வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக நடந்து கொள்வார்கள். அனைத்து வேலைகளிலும் உங்களுக்கு பாராட்டுக்கள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும்.

ரிஷப ராசி

 

குரு சுக்கிரன் இணைகின்ற காரணத்தினால் உங்களுக்கு அதிர்ஷ்டம் வருகின்றது. பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நல்ல முன்னேற்றம் இருக்கும். எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைக்கும். பணம் சேமிப்பதில் வெற்றி கிடைக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். நல்ல செய்தி உங்களை தேடி வரும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். குடும்பத்துடன் சுற்றுலா செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

கடக ராசி

 

குரு சுக்கிரன் சேர்க்கை உங்களுக்கு அதிக நன்மைகளை கொடுக்கப் போகின்றது. ஆடம்பர வாழ்க்கை உங்களுக்கு கிடைக்கும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரும் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டாகும். எதிர்பாராத நேரத்தில் வருமானம் அதிகரிக்கும். நண்பர்களின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் மீதான நம்பிக்கை அதிகமாகும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel