நட்சத்திர பலன்கள்: மாடு வீடு கட்டும் நட்சத்திரங்கள்.. பணம் கொட்டும்.. சிக்கல்களில் சிக்குவது யார்?
Natchathira Palangal: நட்சத்திரங்களின் செயல்பாடுகள் மிகப்பெரிய தாக்கத்தை அனைத்து ராசிகளுக்கும் ஏற்படுத்தும். அந்த வகையில் நட்சத்திரங்களின் செயல்பாடுகளால் கிடைக்கும் பலன்கள் குறித்து இங்கு காண்போம்.
Natchathira Palangal: நட்சத்திரங்களின் செயல்பாடும் மிகவும் அவசியமான ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. கிரகங்களின் செயல்பாடுகளை விட நட்சத்திரங்களின் செயல்பாடுகள் மிகப்பெரிய தாக்கத்தை அனைத்து ராசிகளுக்கும் ஏற்படுத்தும். அந்த வகையில் நட்சத்திரங்களின் செயல்பாடுகளால் கிடைக்கும் பலன்கள் குறித்து இங்கு காண்போம்.
அஸ்வினி நட்சத்திரம்
வீட்டில் மங்கள காரியங்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. சுப நிகழ்ச்சிகளால் உங்களுக்கு செலவுகள் அதிகரிக்கப்படும்.
பரணி நட்சத்திரம்
புதிய நட்பு வட்டாரங்கள் உங்களுக்கு உருவாகும். நண்பர்களால் உங்களுக்கு உதவி கிடைக்கக்கூடும்.
கார்த்திகை நட்சத்திரம்
சொந்த தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இதுவரை ஏற்பட்டுள்ள தடைகள் அனைத்தும் நிவர்த்தி அடையும்.
ரோகிணி நட்சத்திரம்
வேலை செய்யும் இடத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். அரசு ஊழியர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும்.
மிருகசீரிஷம் நட்சத்திரம்
எதிர்பார்த்த காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். தொடங்கிய காரியங்கள் லாபமாக இருக்கும்.
திருவாதிரை நட்சத்திரம்
நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். அரசு துறையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் இருக்கும்.
புனர்பூசம் நட்சத்திரம்
வேலை செய்யும் இடத்தில் புதிய நெருக்கடிகள் தோன்றுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. சிக்கல்கள் பெரிதாக மாறாமல் பார்த்துக் கொள்ளவும்.
பூசம் நட்சத்திரம்
தடைப்பட்டு கடந்த காரியங்கள் அனைத்தும் வெற்றியடையும். புதிய முயற்சிகள் உங்களுக்கு முன்னேற்றம் தரும்.
ஆயில்யம் நட்சத்திரம்
வீட்டில் மங்கள காரியங்கள் மூலம் உங்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும்.
மகம் நட்சத்திரம்
தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும். எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும்.
பூரம் நட்சத்திரம்
மனதில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். பண வரவு உங்களுக்கு அதிகமாகும்.
உத்திரம் நட்சத்திரம்
எதிரிகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும். உங்களுக்கு நிதி ஆதாயம் கிடைத்த அதிக வாய்ப்பு உள்ளது.
அஸ்தம் நட்சத்திரம்
புதிய நட்பு வட்டாரம் அதிகரிக்கும். வசதி மற்றும் வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.
சித்திரை நட்சத்திரம்
வாழ்க்கைத் துணையால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
சுவாதி நட்சத்திரம்
பண வரவு உங்களுக்கு அதிகரிக்கும். நிதி நெருக்கடியில் இருந்து உங்களுக்கு விடுதலை கிடைக்கும்.
விசாகம் நட்சத்திரம்
குழந்தைகளால் மகிழ்ச்சியான செய்தி உங்களை தேடி வரும். கல்வியில் முன்னேற்றம் பெற்று வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
அனுஷம் நட்சத்திரம்
உங்களது இலக்குகளை அடைவதற்கு பல சிரமங்கள் ஏற்படக்கூடும். வீட்டில் உங்களுக்கு எதிர்ப்பு ஏற்படக்கூடும்.
கேட்டை நட்சத்திரம்
கடின உழைப்பு உங்களுக்கு தனி அடையாளத்தை பெற்றுக் கொடுக்கும். முன்னேற்றம் உங்களைத் தேடி வரும்.
மூலம் நட்சத்திரம்
ஆபத்து உங்களை தேடி வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. தெரியாத நபரால் உங்களுக்கு உதவி கிடைக்கும்.
பூராடம் நட்சத்திரம்
அனைத்து சிக்கல்களும் உங்களுக்கு நிவர்த்தி அடையும். குடும்பத்தில் இருப்பவர்களால் உங்களுக்கு உதவி கிடைக்கும்.
உத்திராடம் நட்சத்திரம்
வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் செயல்களைக் கண்டு எதிரிகள் அச்சம் கொள்ள தொடங்கி விட்டார்கள்.
திருவோண நட்சத்திரம்
குடும்ப வாழ்க்கை உங்களுக்கு சிறப்பாக இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும்.
அவிட்டம் நட்சத்திரம்
இதுவரை கண்ணுக்கு தெரியாமல் வந்த எதிர்ப்புகள் அனைத்தும் தடம் தெரியாமல் மறைந்து போகும்.
சதயம் நட்சத்திரம்
வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு திறமைக்கேற்ற முன்னேற்றம் கிடைக்கும். தொழில் சிறப்பாக இருக்கும்.
பூரட்டாதி நட்சத்திரம்
வியாபாரத்தில் ஏற்பட்டு வந்து சிக்கல்கள் அனைத்தும் குறையும். தொழிலில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கக்கூடும்.
உத்திரட்டாதி நட்சத்திரம்
அமைதியாக செயல்படுவது நல்லது. முன்கோபத்தை குறைத்துக் கொண்டால் முன்னேற்றம் கிடைக்கும்.
ரேவதி நட்சத்திரம்
கடன் சிக்கல்களில் இருந்து விடுதலை கிடைக்கும். மன நிம்மதி மற்றும் முன்னேற்றம் உங்களைத் தேடி வரும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.